»   »  அனிருத்தின் அடுத்த அதிரடி 'அவளுக்கென'.. காதலர் தினத்தில் வெளியாகிறது!

அனிருத்தின் அடுத்த அதிரடி 'அவளுக்கென'.. காதலர் தினத்தில் வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் வருகின்ற காதலர் தினத்தையொட்டி 'அவளுக்கென' என்று தொடங்கும் ஒரு பாடலை வெளியிடவுள்ளார்.

காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத பாடலுக்கு இசையமைத்து வெளியிடுகிறார் அனிருத்.

Anirudh's Next Single Track from Valentine's Day

இதற்கு முன்னர் சான்ஸே இல்லை, எனக்கென யாரும் இல்லையே, நானும் ரவுடிதான், வணக்கம் சென்னை, மாரி என்று 5 முறை இருவரும் இணைந்து பணிபுரிந்திருக்கின்றனர்.

இதில் சென்னையைப் பற்றிய பாடலாக வெளியான 'சான்ஸே இல்லை' மற்றும் காதலைப் பற்றி வெளியான 'எனக்கென யாரும் இல்லையே' போன்ற பாடல்கள் எந்தப் படங்களிலும் வெளியாகாவிடினும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக மாறின.

அதிலும் கடந்த வருடம் வெளியான 'எனக்கென யாரும் இல்லையே' பாடல் தொடர்ந்து பல முன்னணி மியூசிக் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் காதலர்கள், இளைஞர்களிடம் அதிகமான வரவேற்பைப் பெற்ற இப்பாடலை பலரும் தங்களது மொபைல் காலர்டியூனாகவும், ரிங்டோனாகவும் வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வருட காதலர் தினத்திற்கு 'அவளுக்கென' என்ற ஒற்றைப் பாடலை அனிருத் வெளியிடுகிறார். 'எனக்கென' பாடலைப் போல இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Music Composer Anirudh Ravichander's Next Single Track 'Avalukena' Released on February 14th For Valentine's Day Special.

60 words

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் வருகின்ற காதலர் தினத்தையொட்டி 'அவளுக்கென' என்று தொடங்கும் ஒரு பாடலை வெளியிடவுள்ளார்.காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பாடலுக்கு இசையமைத்து வெளியிடுகிறார் அனிருத்.

English summary
Music Composer Anirudh Ravichander's Next Single Track 'Avalukena' Released on February 14th For Valentine's Day Special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil