»   »  சோனி நிறுவனத்துடன் அனிருத் ஒப்பந்தம்!

சோனி நிறுவனத்துடன் அனிருத் ஒப்பந்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிகக் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் அனிருத், முன்னணி இசை நிறுவனமான சோனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதன் மூலம் அனிருத்தின் தனி இசை ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகளின் உரிமை சோனிக்கு கைமாறுகிறது.

முன்னணியில்

முன்னணியில்

விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்போது அனிருத்தான் இசை அமைப்பாளர். தற்போது அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தான் இசையமைக்கிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இவருடைய இசையில் தற்போது ‘ரெமோ', ‘ரம்' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அனிருத்

அனிருத்

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி தனிப்பாடல் தொகுப்புகள் மற்றும் வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார் அனிருத்.

சோனி

சோனி

இந்நிலையில் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த பாடல்களை உலக அளவில் பிரபலமாக்க சோனி நிறுவனம் ஒப்பந்தத்தை போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Read more about: anirudh, sony, அனிருத்
English summary
Young Music director Anirudh has entered a pact with leading music label Sony to release his albums and concerts.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil