»   »  யம்மாடி.. இவ்ளோ சம்பளமா அனிருத்துக்கு!

யம்மாடி.. இவ்ளோ சம்பளமா அனிருத்துக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எண்ணி பத்துப் படம் பண்ணியிரப்பாரா அனிருத்... ஆனால் பையன் கேட்கிற சம்பளத்தைக் கேட்டால் மயக்கமே வருகிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.

புதிதாக ஒப்பந்தமாகியுள்ள ஒரு தெலுங்குப் படத்துக்கு அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் ரூ 1.5 கோடி!

Anirudh's salary is Rs 1.5 cr

வழக்கமாக தெலுங்குப் படங்களுக்கு இசையமைக்க அதிகபட்சம் ரூ 50 லிருந்து 75 லட்சம்தான் கொடுப்பார்களாம். தேவி ஸ்ரீ பிரசாத்-தான் டாப் சம்பளம் பெறுபவர். இவருக்கு அங்கே ஒரு கோடி வரை தருகிறார்களாம்.

ஒரு மாறுதலுக்காக இந்த முறை தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் அனிருத்துடன் இணைந்திருக்கிறார் த்ரிவிக்ரம். இவரது புதிய படத்துக்குதான் அனிருத்துக்கு ரூ 1.5 கோடி சம்பளம்.

இந்த நேரம் பார்த்து அவரது இசையில் வெளியான முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி... 100 மில்லியன் முறை பார்வையிடப்பட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பாடல் இத்தனை முறை பார்வையிடப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.

விஷயம் தெரிந்து செம கடுப்பிலிருக்கிறார்களாம் வேறு சில தெலுங்கு இசையமைப்பாளர்கள்.

English summary
According to reports, music director Anirudh has signed a Telugu movie for Rs 1.5 cr salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil