»   »  ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!

ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வம்சம், மௌனகுரு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்த அருள்நிதியின் ஏழாவது படம் தான் டிமாண்டி காலனி.

19ம் நூற்றாண்டில் சென்னை ஆழ்வார் பேட்டையில் நடந்த திகில் சம்பவங்களை தொகுத்து, திருப்பங்கள் நிறைந்த படமாக டிமாண்டி காலனியை உருவாக்கி வருகிறார் அஜய்ஞானமுத்து. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடன் உதவியாளராக இருந்த அஜய்ஞானமுத்துவின் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மதுமிதா, திலக் ஜனத், எம்.எஸ்.பாஸ்கர், அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாயகியின் பெயரை மட்டும் இன்னமும் அறிவிக்காமல், படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது.

அறிமுக இசையமைப்பாளர்...

அறிமுக இசையமைப்பாளர்...

பிரபல கிதார் இசைக்கலைஞரான கேபாஜெரேமியா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். அரிமாநம்பி, கணிதன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய யுவன் ஸ்ரீனிவாஸ் இப்படத்திற்கு படத்தொகுப்பு.

பாடகராக அனிருத்...

பாடகராக அனிருத்...

இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர்களான அனிருத்தும், டி.இமானும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர். நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

19ம் நூற்றாண்டு செட்...

19ம் நூற்றாண்டு செட்...

19ம் நூற்றாண்டில் இருந்தது போல் சென்னையில் உள்ள லஸ்கார்னர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன்...

போஸ்ட் புரொடக்‌ஷன்...

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸும், மோகனா மூவிசும் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், பின்னணி இசைக்கோர்ப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.

திகில் கிளப்ப...

திகில் கிளப்ப...

சமீபகாலமாக வித்தியாசமான பேய்ப்படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அருள்நிதியின் டிமாண்டி காலனியும் திகில் கிளப்பத் தயாராகி வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
The famous music director and singer Anirudh has sung a song for Arulnidhi in Demonte colony.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil