ராஜமெளலி படத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்த அனிருத்...என்ன காரணம் தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் வேலை செய்து கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர், பாடகர் என்ற பெயருடன் பல சூப்பர் ஹிட் பாடல்களை உருவாக்கியவர் அனிருத். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். முதல் படத்திலேயே இவர் இசையமைத்த கொலவெறி பாடல் உலக ஃபேமஸ் ஆகி விட்டது. ஒரே பாட்டில் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்து விட்டார் அனிருத்.

டாப் ஹீரோக்களுக்கு இசை

டாப் ஹீரோக்களுக்கு இசை

அதைத் தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி, அஜித், சூர்யா, ரஜினி, விஜய், கமல் போன்ற அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பல பாடல்களை தானே பாடியும் உள்ளார். தற்போது கமல் நடிக்கும் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

சம்பளம் வாங்காத அனிருத்

சம்பளம் வாங்காத அனிருத்

இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படத்திற்காக அனிருத் சம்பளமே வாங்காமல் வேலை செய்துள்ள தகவலை ராஜமெளலியே பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நட்பு பாடலை அனிருத் தான் பாடி உள்ளார். இந்த பாடலை 5 மொழிகளிலும் அனிருத் தான் பாடி உள்ளார். அனிருத்தின் குரலில் அமைந்த இந்த பாடல் ராஜமெளலியின் மனதிற்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

ஆர்ஆர்ஆர் படத்திற்காக நட்பு பாடலை பாடுவதற்கு தான் அனிருத் சம்பளம் வாங்கவில்லையாம். சம்பளம் பற்றி அனிருத்திடம் பேசிய போது, இதை உங்கள் மீதுள்ள அன்பிற்காக தான் செய்கிறேன். இசை, பாடல் என எதற்கும் சம்பளம் வேண்டாம் என ராஜமெளலியிடமே கூறி மறுத்து விட்டாராம் அனிருத். இந்த தகவலை தான் தற்போது ராஜமெளலி வெளியிட்டுள்ளார்.

ரிலீசிற்கு தயாராகும் ஆர்ஆர்ஆர்

ரிலீசிற்கு தயாராகும் ஆர்ஆர்ஆர்

ராஜமெளலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ம் தேதியே ரிலீசாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மார்ச் 25 ம் தேதி ஆர்ஆர்ஆர் படம் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. இதனால் ரிலீசிற்கான வேலைகளும் ப்ரொமோஷன் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X