»   »  நானும், தனுஷும் பிரிய ஒரே காரணம் தான்: மனம் திறந்த அனிருத்

நானும், தனுஷும் பிரிய ஒரே காரணம் தான்: மனம் திறந்த அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால் தனுஷும், அனிருத்தும் சேர்ந்து பணியாற்றாமல் ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளார்களாம்.

சொந்தக்காரப் பையனான இசையமைப்பாளர் அனிருத்தை வளர்த்துவிட்டு அழகு பார்த்தவர் தனுஷ். இந்நிலையில் தனுஷ் அனிருத்தை தவிர்த்து வருகிறார். தனது படங்களில் அனிருத்தை ஒப்பந்தம் செய்வது இல்லை.

தனுஷின் புதிய ஆஸ்தான இசையமைப்பாளராக ஆகியுள்ளார் ஷான் ரோல்டன்.

ட்விட்டர்

ட்விட்டர்

தனுஷ் அனிருத்தை ட்விட்டரில் பின்தொடர்வதை கூட நிறுத்தினார். இந்த பிரச்சனை குறித்து தனுஷும், அனிருத்தும் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அனிருத் பிரிவு பற்றி பேசியுள்ளார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் எப்பொழுதுமே என் நலம் விரும்பி. என் மீது எனக்கே நம்பிக்கை இல்லாதபோது என்னை நம்பிய ஒரே ஆள் தனுஷ் என அனிருத் கல்லூரி மாணவர்களிடையே பேசியபோது கூறியுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஒரு படைப்பாளி அடுத்தடுத்த படங்களில் ஒரே நபரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணியாற்றினால் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. அவர்களுக்கு போர் அடித்துவிடும் என்கிறார் அனிருத்.

ஒரு படைப்பாளி அடுத்தடுத்த படங்களில் ஒரே நபரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணியாற்றினால் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. அவர்களுக்கு போர் அடித்துவிடும் என்கிறார் அனிருத்.

குட்டி பிரேக்

குட்டி பிரேக்

ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால் தான் நானும், தனுஷும் ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் மீண்டும் ஒன்றாக பணியாற்றுவோம் என அனிருத் தெரிவித்துள்ளார்.

English summary
Music director Anirudh said that he and Dhanush have taken a short break in order to avoid boredom among audiences by working together film after film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil