»   »  கேள்விக்குறியான சிம்புவின் எதிர்காலம்... ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்பு பெறுகிறார் அனிருத்!

கேள்விக்குறியான சிம்புவின் எதிர்காலம்... ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்பு பெறுகிறார் அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் விவகாரத்தால் சிம்புவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சர்ச்சையில் முக்கியப் பங்கு வகிக்கும் அனிருத் தப்பி வருகிறார். அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தவண்ணம் உள்ளன.

பீப் பாடல் பாடி வெளியிட்டதைக் கண்டித்து சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நடிகர் சிம்புவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

அதே நேரம் இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற அனிருத் இந்தப் பிரச்சினையின் காரணமாக அங்கேயே தங்கி விட்டார். இதனால் சிங்கம் 3 மற்றும் 2 புதிய படங்களில் இருந்தும் அனிருத்தை நீக்கம் செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

Anirudh Team Up with Prashanth for Special 26 Remake

இந்நிலையில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் இயக்குநர் தியாகராஜன் அதில் நாயகனாக பிரஷாந்தை நடிக்கவைக்க இருக்கிறார்.

இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் தற்போது திட்டம் தீட்டி வருகின்றனர். பீப் பாடல் விவகாரத்தில் இன்னும் இந்தியா திரும்பவில்லை என்று கூறப்படும் அனிருத் அங்கிருந்தபடியே புதிய வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.

மேலும் வருகின்ற காதலர் தினத்திற்கு மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்தவும் அனிருத் திட்டமிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

அதே நேரம் இந்த விவகாரத்தில் சிம்புவின் நிலைதான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சிம்பு தவித்து வரும் நிலையில் அனிருத் ஜாலியாக கனடாவில் உட்கார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Beep Song Controversy now Anirudh got new Opportunity. He is Team Up with Actor Prashanth for Special 26 Remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil