»   »  காதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்... ட்விட்டரில் அறிவிப்பு!

காதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்... ட்விட்டரில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்- வீடியோ

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து கடைசியாக தமிழில் வெளியான 'வேலைக்காரன்' ஆல்பம் செம ஹிட்டானது.

இப்போது, 'அஞ்ஞாதவாசி' படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாகக் கவந்திருக்கிறார் அனிருத்.

இந்நிலையில், வரும் காதலர் தினத்துக்கு அனிருத் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கவுள்ளார்.

அனிருத் அறிமுகம்

அனிருத் அறிமுகம்

அனிருத் இசையமைப்பாளராக களமிறங்கிய முதல் படம் தனுஷ் நடித்த '3'. இப்போது முன்னணி இசையமைப்பாளராக பட்டையைக் கிளப்புவதற்கெல்லாம் விதை 'கொலவெறி' பாடல் போட்டதுதான். இந்தியாவில் யூ-ட்யூபில் அதிகம் தேடப்பட்ட பாடல் என்ற பெருமையும் அனிருத் இசையமைத்த 'கொலவெறி' பாடலுக்கு உண்டு.

குழந்தைகளின் ஃபேவரிட்

குழந்தைகளின் ஃபேவரிட்

'வொய் திஸ் கொலவெறி' பாடலின் மூலம் குழந்தைகளையும், சிறுவர்களையும் தன் பக்கம் ஈர்த்தனர் அனிருத்தும் தனுஷும். இந்தப் பாடலுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கவர் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டதும் பெரிய சாதனை. குழந்தைகள் பாடிய வீடியோக்கள் யூ-ட்யூபில் சக்கைப்போடு போட்டன.

முதல் இந்திய வீடியோ

முதல் இந்திய வீடியோ

உலகம் முழுவதும் 100 மில்லியன் யூ-ட்யூப் பார்வைகளைக் கடந்த முதல் இந்திய வீடியோ எனும் சாதனையைப் படைத்தது இந்த 'வொய் திஸ் கொலவெறி' பாடல். இப்போது உலகமெங்கும் பிரபலமாக இருக்கும் அனிருத்துக்கு எக்கச்சக்க ரசிகர்கள்.

காதலர் தின ஸ்பெஷல்

இந்நிலையில், வரும் காதலர் தினத்துக்காக வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கவிருக்கிறார் அனிருத். இது தொடர்பான ஒரு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிருத். இதனால் ரசிகர்கள் செம ஹேப்பி.

அனிருத்தின் புது பிஸினஸ்

அனிருத்தின் புது பிஸினஸ்

அனிருத் சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்மர் ஹவுஸ் ஈட்டரி என்ற பெயரில் சென்னையில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார். நண்பகல் 12 மணி முதல் இந்த உணவகம் செயல்படுமாம். அனிருத் துவங்கியுள்ள உணவகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் தெருவில் அமைந்துள்ளது.

English summary
Music director Anirudh will give a Surprise treat for this Valentine's Day. Anirudh has posted about this special treat on his Twitter page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil