அனிருத்திற்கு விரைவில் டும்டும்டும்...பொண்ணு அவர் இல்லையாம்...அப்போ யாரு?

சென்னை : பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத்திற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண் யார் என்ற தகவலும் வெளியாகி உள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது.

Recommended Video

Anirudh-க்கு விரைவில் திருமணம் ..பொண்ணு அவர் இல்லையாம்...அப்போ யாரு? |Filmibeat Tamil

நடிகர் ரவி ராகவேந்தரின் மகனான அனிருத், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்காக ஒய் திஸ் கொலவெறி என்ற ஒரே பாடலின் மூலம் செம பாப்புலர் ஆகி விட்டார். யூட்யூப்பில் இந்த பாடலின் சாதனை தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

10 ஆண்டில் அசுர வளர்ச்சி

10 ஆண்டில் அசுர வளர்ச்சி

தமிழை தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து, 10 ஆண்டுகளில் டாப் இசையமைப்பாளர் ஆக வளர்ந்துள்ளார். தற்போது பிரைவேட் பார்ட்டி, ஏகே 61, தலைவர் 169 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் இசை என்றாலே படத்தில் ஒரு பாடலாவது மாஸ் ஹிட் அடிப்பது கன்ஃபார்ம் என சொல்லும் அளவிற்கு சினிமா உலகில் முக்கிய இடம் பிடித்து விட்டார்.

விக்ரமிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

விக்ரமிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் வெற்றி பெற்றுள்ளார் அனிருத். தற்போது கமல் நடித்து, அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ள விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். ஃபர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடல் செம ஹிட்டான நிலையில், செகண்ட் சிங்கிளாக சென்டிமென்ட் பாடல் இன்று வெளியிடப்பட உள்ளது.

பொண்ணு அவர் இல்லையா

பொண்ணு அவர் இல்லையா

கடந்த ஆண்டுகளாக காதல், கல்யாணம் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் அனிருத். ஆன்ட்ரியா, த்ரிஷா என பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்ட அனிருத், நடிகை கீர்த்தி சுரேஷை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக வதந்திகள் பரவி வந்தது. இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாகவே கீர்த்தி சுரேஷ் புதிய படங்களில் கமிட் ஆவதை குறைத்து வருவதாகவும் கூட பேசப்பட்டது.

அனிருத்திற்கு திருமணம்

அனிருத்திற்கு திருமணம்

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, அனிருத்திற்கு விரைவில் திருமணம் நடத்த அவரது வீட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் பொண்ணு, சினிமா உலகை சேர்ந்தவர் இல்லையாம். பிரபல டிவி சேனல் அதிபர் ஒருவரின் மகளாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பரபரக்கும் கோலிவுட்

பரபரக்கும் கோலிவுட்

இந்த தகவலால் யார் அந்த டிவி சேனல் அதிபர், இந்த தகவல் உண்மை தானா, எப்போ திருமணம், காதல் திருமணமா என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அனிருத் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் கோலிவுட்டில் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X