»   »  விசுவாசம் படத்தோட மியூஸிக் டைரக்டர் அவர் இல்லையாமே?

விசுவாசம் படத்தோட மியூஸிக் டைரக்டர் அவர் இல்லையாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சிவா இயக்கத்தில் உருவான அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகியப் படங்களுக்கு இசையமைத்த அனிருத்துக்கு இந்த படத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான 'வீரம்', 'வேதாளம்' படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான 'விவேகம்' அந்தளவுக்கு பேசப்படாவிட்டாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

இந்நிலையில், நான்காவது முறையாக இயக்குநர் சிவாவும் அஜித்தும் கூட்டு சேரவுள்ளனர். இப்படத்துக்கு விசுவாசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையில்

அனிருத் இசையில்

விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்', ‘விவேகம்' ஆகிய இரு படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருந்தார்.

அனிருத்துக்கு வாய்ப்பில்லை

அனிருத்துக்கு வாய்ப்பில்லை

ஆனால் அஜித்தின் அடுத்த படமான ‘விசுவாசத்தில் அனிருத்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என கூறப்படுகிது. மாறாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

சமீபத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கூட்டணி

மீண்டும் கூட்டணி

ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஆல்பம் ஹிட். இந்நிலையில், அஜித்தும் யுவன் ஷங்கர் ராஜாவும் விசுவாசம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.

English summary
Yuvan shankar raja is the music director for Ajith's Visuvasam movie. Aniruth was the music director for Last two movies of Ajith. But in Visuvasam Aniruth not getting chance.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil