»   »  அரசே.. அனிதா போன்று எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டும் உங்கள் புதிய இந்தியாவில் புதைக்க..?

அரசே.. அனிதா போன்று எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டும் உங்கள் புதிய இந்தியாவில் புதைக்க..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசே... மாநில அரசே... இன்னும் எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டும் உங்கள் புதிய இந்தியாவில் புதைக்க..? என்று இயக்குனர் ராஜு முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவராக ஆசைப்பட்ட ஏழை மாணவி அனிதா நீட் தேர்வால் தனது கனவு நிறைவேறாது என்பதை உணர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில் ஜோக்கர் பட புகழ் இயக்குனர் ராஜு முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அனிதா பற்றி போஸ்ட் போட்டுள்ளார்.

அனிதா

அனிதா

தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமைக்காகப் போராடிய சகோதரி அனிதாவை, நீட் என்னும் மனுதர்ம பீடம் பலி வாங்கிவிட்டது. சாதியாலும் வறுமையாலும் ஒடுக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளின் கல்வி கனவுகள் தொடர்ந்து தூக்கில் தொங்குகின்றன.

உயிர்கள்

உயிர்கள்

மத்திய அரசே... மாநில அரசே... இன்னும் எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டும் உங்கள் புதிய இந்தியாவில் புதைக்க..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராஜு முருகன்.

புதிய இந்தியாவா?

நம்முடைய தேவைகளை போராட்டத்தினாலும், மரணத்தினாலும் நமக்கு கிடைக்க செய்வது தான் புதிய இந்தியாவா😓😓😓 என்று ராஜு முருகன் போஸ்ட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பிள்ளைகள்


எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டுமென்று விளையாட்டுக்கு கூட கேட்டுவிடாதீர்கள் ......!!!!

கண்டிப்பாக அவர்கள் புதைத்தே விடுவார்கள் ...!!!!! என மற்றொருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Joker fame director Raju Murugan has questioned the state and central governments over Anitha's suicide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil