Just In
- 20 min ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- 41 min ago
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- 1 hr ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- 1 hr ago
சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்!
Don't Miss!
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அனிதாவை விட ரம்யா நல்லா ‘அதை’ பண்றாங்களே.. அசந்து போன ரசிகர்கள்.. நக்கலும் நிறைய இருந்துச்சு!
சென்னை: அனிதா சம்பத் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்து செய்தி வாசித்த மார்னிங் டாஸ்க் காமெடி அட்டகாசம்.
அனிதா சம்பத்தை விட ரம்யா பாண்டியன் நல்லாவே செய்தி வாசிக்கிறாங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் அசந்து போய் பார்த்தனர்.
இவங்க ரெண்டு பேரும் பேசியதை விட, இடையே புகுந்து, பாலா, அர்ச்சனா, சோமசேகர் பண்ண சேட்டைகள் தான் வேற லெவல்.

பிக் பாஸ் செய்திகள்
அனிதா சம்பத் என்னடா செய்தி வாசிக்கிறதை பிக் பாஸ் வீட்டில ரொம்ப நாளா விட்டுட்டு முழு நேர சண்டைக் கோழியாக மாறிட்டாங்களே என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, நேற்றைய மார்னிங் டாஸ்க்கில் ரம்யாவுடன் இணைந்து அழகா பிக் பாஸ் செய்திகளை வாசித்தனர்.

நக்கல் அடித்த அனிதா
பிக் பாஸ் போட்டியாளர்கள், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு உள்ளே கால் பண்ணி, காலை கட் பண்ணி விளையாடியதில், 2000 மதிப்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய லக்சரி பட்ஜெட் வெறும் 600 மதிப்பெண்களாக குறைந்து விட்டது என்பதை ரொம்ப நக்கலாகவே பேசினார் அனிதா சம்பத்.

கலக்கிய ரம்யா
அச்சு அசல் செய்தி வாசிப்பாளராகவே ரம்யா பாண்டியன் மைக்கெல்லாம் பிடித்துக் கொண்டு பேசுவது போல நடித்து அனிதா சம்பத்தை ஓவர் டேக் செய்து விட்டார். பிக் பாஸ் வீட்டின் நிலவரம் எப்படி இருக்கு அனிதா எனவும் பிக் பாஸ் வீடே ஒரு புயல் காடாக மாறியுள்ளதாகவும் கூறி செம கலாய் கலாய்த்தார்.

டிஸ்டர்ப் பண்ண பாலாஜி
அனிதா சம்பத்தும், ரம்யா பாண்டியனும் நல்லா செய்தி வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் பாலாஜி முருகதாஸும், அர்ச்சனா அக்காவும் வரிந்து கட்டிக் கொண்டு, அவங்களை வந்து டிஸ்டர்ப் பண்ணாங்க, ஆஜீத்தும் பாலா கூடவே வந்து செல்ஃபி எல்லாம் எடுத்துக் கொண்டார். சோமசேகர் கேமராமேனாக மாறி தன் பங்குக்கு வித்தைக் காட்டினார்.

சிக்கன் போச்சே
லக்சரி பட்ஜெட்டுக்கு ஆப்பு வைத்த நிலையில், சிக்கன் போச்சே என்றும், வெறும் ஆரி கேட்ட சத்துமாவு கஞ்சி தான் கிடைத்தது என்றும், அதனால், பிக் பாஸ் வீட்டு மக்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளனர் என அனிதா பேசியதும், நிஷாவும், அர்ச்சனாவும் அழுது புலம்பும் மக்களாக சீன் போட்டார்கள். எல்லாமே சிறந்த நடிகர்கள் தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அன்சீன்ல ஏராளம்
மார்னிங் டாஸ்க்கின் ஏகப்பட்ட டாஸ்க்குகள் எல்லாம் கர்ண கொடூரமாக இருந்ததால், அதை எல்லாம் அப்படியே அன்சீனில் தூக்கி வைத்து விட்டார் எடிட்டர். அர்ச்சனா விழுந்து புரண்டு நடித்தது, அனிதா குழந்தையாக பண்ண ஓவர் ஆக்டிங் எல்லாத்தையும் காட்டாமல் இருந்ததே சிறப்பு.