For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எனக்கு ரெண்டாவது இடம் தான் வேணும்.. அடம்பிடித்த அனிதா.. கோபத்துல என்ன செஞ்சாரு தெரியுமா?

  |

  சென்னை: அனிதா சம்பத், இரண்டாவது இடத்தில் நிற்பேன் என அடம்பிடித்த நிலையில், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் சேர்ந்து ஓட்டெடுப்பு நடத்த ஆரம்பித்தனர்.

  மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task

  ஹவுஸ்மேட்கள் இருமுறை மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டதால், கடுப்பான அனிதா, எனக்கு எந்த இடமும் வேண்டாம் என தனியாக போய் அமர்ந்து கொண்டார்.

  இறுதியாக பஸர் அடிக்கும் வரையிலும், அனிதா சம்பத் எந்தவொரு இடத்திலும் போய் நிற்கவில்லை என்பது பிரச்சனையை உருவாக்கியது.

  அதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா

  தேவையில்லாத ஆணி

  தேவையில்லாத ஆணி

  24 மணி நேரம் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்களை கொண்டு விளம்பரத்தை தவிர்த்து 45 நிமிட ஷோவை உருவாக்க முடியாமல் பிக் பாஸ் குழு திண்டாடி வருகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த சீசனில் எல்லாமே டிவி ஆர்டிஸ்ட்டுகள் என்பதால், ரொம்பவே ரூல்களை பிரேக் பண்ணி சேஃப் கேம் ஆடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும், நேற்று நடத்தப்பட்ட அந்த ஆர்டர் காட்சிகளும் தேவையில்லாத ஆணி என அனிதாவின் பாணியிலே ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

  60 நாள் ஓட்டியாச்சு

  60 நாள் ஓட்டியாச்சு

  பிக் பாஸ் முதல் சீசன் முதல் மூன்றாவது சீசன் வரை சுவாரஸ்யமாக இருந்த நிகழ்ச்சியை, ஒட்டுமொத்தமாக 4வது சீசனில் குழி தோண்டி புதைக்க விஜய் டிவி புராடக்டுகளே வேலை செய்வதாகவும், சுவாரஸ்யமாக அந்த வீட்டில் எதையுமே போட்டியாளர்கள் செய்ய தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வியும், பெருசா ஒண்ணுமே பண்ணாம 60 நாட்களை ஓட்டிட்டாங்க, மீதமுள்ள 40 நாட்களும் இப்படியே தான் மொக்கையாக ஓடும் என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

  நாமினேஷனில் அனிதா

  நாமினேஷனில் அனிதா

  நாமினேஷனில் வந்தாலும் ஷிவானி பெருசா எதையுமே கண்டு கொள்ளமாட்டார். எப்படி இருந்தாலும், தனது ரசிகர்கள் தன்னை காப்பாற்றிவிடுவார்கள் என்கிற தைரியத்தில் தான் இங்கே ஜாலியாக பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், நாமினேஷனுக்கு அனிதா வந்து விட்டால், ஆளே மாறிவிடுகிறார். அதுவரைக்கும் அமைதியாக இருக்கும் அவர் இந்த வாரம் இப்படி சீற அது தான் காரணம்.

  2வது இடத்தில் சனம்

  2வது இடத்தில் சனம்

  சனம் ஷெட்டி முதல் இடத்துக்கு சண்டை போட்ட நிலையில், சத்தமே இல்லாமல் ஆரி அர்ஜுனா முதல் இடத்திற்கு ஹவுஸ்மேட்கள் ஓட்டுப் போட்டு வந்தார். இரண்டாவது இடத்தில் நின்று கொண்டிருந்த அனிதாவுக்கு பதிலாக, சனம் ஷெட்டிக்கு அந்த இடத்தை கொடுக்கலாம் என ஆரி ஓட்டுப் போட்டு சனம்க்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

  காண்டான பாலா

  காண்டான பாலா

  சனம் ஷெட்டி முதல் இடத்தில் நின்ற போதும் அதை எதிர்த்து பேசிய பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டிக்கு இரண்டாவது இடம் கொடுத்த போதும் ஒத்துக்கொள்ளவில்லை. எல்லாருக்கும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், சனம் ஷெட்டிக்கு யாருமே கால் பண்ணாததால், அது பிக் பாஸ் மிஸ்டேக் என ஆரி வாதாடி சனம்க்கு இரண்டாவது இடத்தை கொடுத்ததாலும், பாலா காண்டாகி விட்டார்.

  அனிதாவின் இடம்போச்சு

  அனிதாவின் இடம்போச்சு

  இரண்டாவது இடத்தில் ஜாலியாக சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அனிதா சம்பத்தை, 3வது இடத்துக்கு நகர சொன்னதும், எனக்கு எந்த இடமும் வேண்டாம் என அடம் பிடித்தார். மூன்றாவது இடத்திற்கு பாலா வந்து நின்றார். 4ம் இடத்திலும் வந்து நிற்க போவதில்லை, நான் இந்த வீட்டில போட்டியாளரே இல்லை என பேசிய அனிதாவுக்கு 10வது இடம் தான் மீதம் இருந்தது.

  கடைசி வரை பிடிவாதம்

  கடைசி வரை பிடிவாதம்

  ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், சோமசேகர், அர்ச்சனா, கேபி, ஷிவானி, நிஷா என ஏகப்பட்ட போட்டியாளர்கள் எந்தவொரு சண்டையும் போடாமல் அழகாக கடைசி வரிசையில் தாராளமாக நின்ற நிலையில், கடைசி வரைக்கும் பிடிவாதம் பிடித்துக் கொண்டு மீதம் இருந்த 10வது இடத்திலும் நிற்காமல் இருக்க, பிக் பாஸ் பஸர் அடித்து அந்த டாஸ்க்கை அப்படியே முடித்து விட்டார்.

  English summary
  Anitha Sampath create an issue after she threw away from second spot and she didn’t accept the balance tenth spot also.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X