For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஓவரா ஒப்பாரி வச்ச அனிதா.. போதும், போதும்.. ரொம்ப லெந்த்தா போகுது.. சாம் செம கலாய்.. புது புரமோ!

  |

  சென்னை: இன்றைய மூன்றாவது புரமோவில் அனிதா தனது அழுகாச்சி கதையை சொல்ல, சம்யுக்தா ரொம்ப லாங்கா போதுடா என நிறுத்தி அசிங்கப்படுத்தி விட்டார்.

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 25வது நாள் எபிசோடுக்கான மூன்றாவது புரமோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  இன்றைய எபிசோடு அழுகாச்சியாவே போயிடுமோ என பயந்த நெட்டிசன்களுக்கு கொஞ்சம் ரொமான்ஸும் கலாயும் இருக்கு நம்பி வாங்க சந்தோஷமா போங்க என பிக் பாஸ் எடிட்டர் இப்போ போட்டு காட்டியிருக்காரு!

  ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ!

  பிக் சீரியல்

  பிக் சீரியல்

  ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் என சொல்லுவதை விட்டு, பிக் சீரியல் என நிகழ்ச்சியின் பெயரை தயவு செஞ்சு மாத்தி வச்சுடுங்க என ரசிகர்களும் அழுவாத குறையாக கோரிக்கை மனுக்களை விஜய் டிவிக்கு அனுப்பி விட்டனர், இன்றைய முதல் புரமோவை பார்த்து விட்டு. சண்டை போடுறதுக்கு மட்டும் இல்லைங்க, கண் கலங்கி கதறவும் நாங்க டாஸ்க் கொடுப்போம்.

  எவன் அழுதா நமக்கென்ன

  எவன் அழுதா நமக்கென்ன

  பாலாஜி முருகதாஸுக்கு என்றே பிளான் பண்ணி கொடுத்த தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேனே டாஸ்க்கில், அவரு நல்லா ஷிவானி நாராயணன் கூட ஜெல்லாகி ஜல்சா பண்ணி வருகிறார். ராணி மாதிரி இன்ஸ்டாகிராமில் இருந்த பொண்ணை, இப்படி பணிவிடை பண்ண வச்சிட்டியே பிக் பாஸ் என ஷிவானி ஆர்மியினர் கொந்தளித்து வருகின்றனர்.

  ஒப்பாரி வைத்த அனிதா

  ஒப்பாரி வைத்த அனிதா

  முதல் புரமோவின் தொடர்ச்சியான அழுகாச்சி சீரியல் தொடர்கிறது. புருஷனை விட்டுட்டு டூர் அடிக்கும் போதெல்லாம் எத்தனையோ நாட்கள் கண்டுக்காம இருப்பாங்க, இங்க முழுசா ஒரு மாசம் ஆகலை. அதுக்குள்ள எல்லாரையும் இழந்துட்ட மாதிரி ஒப்பாரி வச்சு அழறாங்க.. அதிலும் இந்த அனிதா பொண்ணு இருக்கே லிட்டர் கணக்கில் கிளிசரின் போடாமல் அழுகுதுப்பா..

  ரொம்ப லெந்த்தா போகுது

  ரொம்ப லெந்த்தா போகுது

  போதும்.. போதும்.. ரொம்ப லெந்தா போகுதுன்னு வடிவேலு சொல்வது போல, ஒரு கட்டத்திற்கு மேல் அனிதா சம்பத்தின் ஒப்பாரியை கேட்க முடியாத சம்யுக்தா, உன்னை கழுவி ஊத்தப் போறேன் அதுக்கு முன்னாடி சாரி சொல்லிக்கிறேன். But ரொம்ப லாங்கா போதுடா.. என செம பங்கமாக கலாய்த்து விட்டார்.

  அசிங்கப்பட்ட ஆட்டோக்காரி

  அசிங்கப்பட்ட ஆட்டோக்காரி

  ரம்யா பாண்டியன் எல்லாம் இன்னைக்கு எபிசோடுல அழறாங்க, சம்யுக்தா அழறாங்க.. ஆனால், கடைசியில் அனிதா சம்பத் அழும் போது, இப்படி கலாய்க்கிறாங்களே என யாரும் நினைப்பதற்குள் ரம்யா பாண்டியன், ஷிவானி, பாலா, ஆஜீத் எல்லாம் சிரித்து தொலைக்க, அசிங்கப்பட்ட ஆட்டோக்காரியாக அனிதா அந்த இடத்தில் தனது பர்ஃபார்மன்ஸை நிறுத்திக் கொண்டு இறங்கினார்.

  சம்பவம் இருக்கு

  சம்பவம் இருக்கு

  இன்னைக்கும் பிக் பாஸ் வீட்டில தரமான சம்பவம் இருக்கு என்பதைத் தான் இந்த கடைசி புரமோ உணர்த்துகிறது. சம்யுக்தாவுக்கும் அனிதா சம்பத்துக்கும் முடியை புடிச்சிக்கிட்டு ஒரு WWE ஷோவை டாஸ்க்காவே நடத்துனா நல்லா இருக்கும் பிக் பாஸ் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பிக் பாஸ் மனசு வைக்கணும் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

  English summary
  Samyuktha criticize Anitha Sampath Cries Again At Bigg Boss House And Other Housemates Make Fun Of Her.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X