twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

    |

    சென்னை: ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் திட்டி தீர்ப்பதை பார்த்து கடுப்பான அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களில் அர்ச்சனா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

    இதில் ஃபினாலே வாரத்திற்குள் சென்ற அனிதா, தான் செய்த தவறுக்கெல்லாம் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார்.

    மன்னிப்பு கேட்ட அனிதா

    மன்னிப்பு கேட்ட அனிதா

    குறிப்பாக ஆரியிடம் நாக்கை துருத்தி கையை நீட்டி பேசியது, அந்த சூழ்நிலையில் அப்படி ரியாக்ட் செய்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆரியிடமும் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் அனிதா.

    கழுவி ஊற்றுகின்றனர்

    கழுவி ஊற்றுகின்றனர்

    ஆனால் அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தாங்கள் செய்த தவறு குறித்து ஆரியிடம் கடைசி வரை மன்னிப்பே கேட்கவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் பிக்பாஸ் முடிந்த பிறகும் அவர்களை சமூக வலைதள பக்கங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

    கெஞ்சும் ரம்யா பாண்டியன்

    கெஞ்சும் ரம்யா பாண்டியன்

    ரம்யா பாண்டியன் மட்டுமின்றி அவரது குடும்பமே பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஆரி குறித்து விமர்சித்ததால் அவரை கொஞ்சம் கூடுதலாகவே வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆரம்பத்தில் அது அவர்களின் ஒப்பினியன் என்று சாமர்த்தியமாய் பதில் சொன்ன ரம்யா, தற்போது தனது சமூக வலைதளத்தில் திட்டாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    திட்டாதீர்கள் ப்ளீஸ்

    திட்டாதீர்கள் ப்ளீஸ்

    இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்த ரம்யா பாண்டியன், பிக்பாஸ் 4 முடிந்துவிட்டது. பெண் போட்டியாளர்களை திட்டாதீர்கள். ப்ளீஸ் தயவு செய்து இதை செய்யாதீர்கள். நம்முடைய கடமை அனைத்து பெண்களையும் மதிப்பதுதான். ஆகையால் இந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    அது ஜஸ்ட் ஒரு விளையாட்டு

    அது ஜஸ்ட் ஒரு விளையாட்டு

    இதனை பார்த்த மற்றொரு போட்டியாளரான அனிதா சம்பத், ரம்யா பகிர்ந்துள்ள இந்த இமேஜை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, ஆமாம் ப்ளீஸ்.. அது ஜஸ்ட் ஒரு விளையாட்டு தான்.. அது முடிந்தும் விட்டது. தினமும் நாம 18 போட்டியாளர்களோட இருக்க மாட்டோம்.

    மன அழுத்தத்துல இருக்காங்க

    மன அழுத்தத்துல இருக்காங்க

    ஆகையால் அவ்ளோ ஸ்ட்ரெஸ்டு சூழ்நிலை எல்லாருக்கும் இல்லை. அதனால் அங்க வெளிப்பட்ட குணங்கள் எல்லாருக்கும் டெய்லி வெளிப்படாது. எல்லாரும் ஸ்ட்ரெஸா இருந்த சூழ்நிலையில வெடித்தது அது. பெரும்பாலான பிக்பாஸ் போட்டியாளர்கள், குறிப்பா பெண் போட்டியாளர்கள், அவங்களப் பத்தியும் அவங்க ஃபேமிலி பத்தியும் போடுற நெகட்டிவ் கமென்ட்ஸ்னால பயங்கர மன அழுத்தத்துல இருக்காங்க.

    ஒரு பைசா பிரயோஜனம் இல்ல

    ஒரு பைசா பிரயோஜனம் இல்ல

    ட்ரோல் பண்றவங்களுக்கு இதனால ஒரு பைசா பிரயோஜனம் கூட கிடையாது. ஒரு மெஸேஜை போட்டுட்டு நீங்க உங்க வேலையை பார்க்க போய்டுவீங்க. ஆனா அந்த மெஸேஜ் படிக்கிறவங்க மனசு விட்டுப் போகாது. ரொம்ப நாளைக்கு ஹர்ட் பண்ணும்.

    குக்கு வித் கோமாளி இல்ல

    குக்கு வித் கோமாளி இல்ல

    எல்லாரும் அவங்க அவங்க தப்புகள்ல இருந்து பாடம் கத்துப்பாங்க. மாத்திப்பாங்க. பிக்பாஸ் ஒண்ணும் குக்கு வித் கோமாளி மாதியான ஷோ இல்ல. பிக்பாஸ்ல இருக்க எல்லாரையும் நீங்க ரசிக்க முடியாது. அதை ஒரு விளையாட்டா மட்டும் பாருங்க.

    நிம்மதியா வாழ விடுங்க

    நிம்மதியா வாழ விடுங்க

    பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாரும் அவங்க தனிப்பட்ட வாழ்க்கையை நிம்மதியா வாழ விடுங்க.. இவ்வாறு அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் தன்னை பாராட்டி பதிவிடப்பட்டிருக்கும் கமெண்ட்ஸ்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அனிதா சம்பத்.

    English summary
    Anitha Sampath requesting Netizens to do not abuse Biggboss female contestants. She says Biggboss is not a show like Cook with Comali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X