நான் காதலித்தது உண்மைதான்.. ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டது.. மனம் திறந்த நடிகை அஞ்சலி!

சென்னை: நடிகை அஞ்சலி தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அஞ்சலி. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

எடை குறைந்து..

எடை குறைந்து..

தமிழ், மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி உடல் எடை குறைந்து போய் எலும்பும் தோலுமாய் இருந்த போட்டோக்கள் வெளியானது.

எடையை தேற்றி

எடையை தேற்றி

அதனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி இளைத்து விட்டீர்கள் என பெரும் கவலைப்பட்டனர். தற்போது கொஞ்சம் எடையை தேற்றியுள்ள அஞ்சலி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

தயாரிப்பாளருடன் கிசுகிசு

தயாரிப்பாளருடன் கிசுகிசு

நடிகை அஞ்சலி அவ்வப்போது கிசுகிசுவிலும் அடிபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஒருவருடன் இணைத்து பேசப்பட்ட அஞ்சலி, பின்னர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியானது.

மனம் திறந்த அஞ்சலி

மனம் திறந்த அஞ்சலி

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி தனது காதல் பற்றியும் காதல் தோல்வி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும் தகவல் பரவியது.

தோல்வியில் முடிந்தது

தோல்வியில் முடிந்தது

காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டது. அந்த காதல் நன்றாக சென்றிருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். என் அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன் இவ்வாறு நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X