»   »  இது எடைக்குறைப்பு சீசனா..? செம ஸ்லிம்மாக மாறிய அஞ்சலி!

இது எடைக்குறைப்பு சீசனா..? செம ஸ்லிம்மாக மாறிய அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஞ்சலியின் அதிரடி வெயிட் லாஸ்!- வீடியோ

சென்னை : நடிகை அஞ்சலி, தற்போது சசிகுமார் நடிக்கும் 'நாடோடிகள் 2' படத்தில் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளாக கொஞ்சம் வெயிட் போட்டிருந்த அஞ்சலி தற்போது உடல் இளைத்து செம ஃபிட்டாகி இருக்கிறார்.

அஞ்சலி, உடல் எடையை குறைத்த தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

பப்ளி நடிகைகள்

பப்ளி நடிகைகள்

நடிகைகளில் அனுஷ்கா, ஹன்சிகா உட்பட பலர் உடல் வெயிட் போட்டிருந்தனர். அதற்காக அவர்கள் கடும் உடற்பயிற்சிகளை செய்து தற்போது பல மடங்கு எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகின்றனர்.

வெயிட் குறைத்த அஞ்சலி

சமீபத்தில், நடிகை ஹன்சிகா மிகவும் உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாத அளவிற்கு காணப்பட்டார். இந்த நிலையில் நடிகை அஞ்சலியும் உடல் எடை குறைத்து காணப்படும் தன்னுடைய ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

செம ஃபிட்

செம ஃபிட்

அஞ்சலி உடல் இளைத்து ஃபிட்டாக இருக்கும் இந்தப் படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி வரும் 'நாடோடிகள் 2' படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.

நாடோடிகள் 2

நாடோடிகள் 2

அஞ்சலி நடித்துவரும் 'நாடோடிகள் 2' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி அஞ்சலி ஆகியோரோடு அதுல்யா ரவியும் நடித்து வருகிறார்.

Read more about: anjali அஞ்சலி
English summary
Actress Anjali is currently acting in 'Nadodigal 2'. Anjali has released her slim photo and makes everybody surprised.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil