»   »  ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய் பிறந்த நாளன்று, பலூன் படப்பிடிப்புக்கு நேரில் வந்து கேக் ஊட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகை அஞ்சலி (இருவரும் ஒன்றாகவே வசிக்கிறார்கள் என்ற கிசுகிசு ஏனோ நினைவுக்கு வருகிறது!)

அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் நாயகனாக நடிக்கிறார் ஜெய்.


Anjali surprises Jai

சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


Anjali surprises Jai

பலூன் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் வாங்கியுள்ளார்.


Anjali surprises Jai

பலூன் படப்பிடிப்பு தளத்தில், ஒட்டுமொத்த படக்குழுவினரோடும் ஜெய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஜெய் மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பலூன் படத்தின் கதாநாயகி அஞ்சலி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெய்யை வாழ்த்தினார். அவருடைய வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வந்தார் இயக்குநர் சினிஷ்.

English summary
Actress Anjali gave a surprise visit to Baloon shooting spot and conveyed birthday wishes to actor Jai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil