அஞ்சனா ரொம்ப அடிச்சுட்டாங்களா ப்ரோ?: கயல் சந்திரனுக்காக ஃபீல் பண்ணும் ரசிகர்கள்
சென்னை: அஞ்சனா ரொம்ப அடிச்சுட்டாங்களா ப்ரோ என்று ரசிகர்கள் நடிகர் கயல் சந்திரனிடம் கேட்டுள்ளனர்.
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான அஞ்சனா சன் மியூசிக் சேனலில் இருந்து விலகியுள்ளார். தனக்கு ஒரு பிரேக் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சனா ட்விட்டரில் தனது கணவர் கயல் சந்திரனை கலாய்த்துள்ளார்.
மனைவி
மனைவி உங்களிடம் எந்த பெண்ணின் புகைப்படத்தையாவது காண்பித்து அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் பதில் சொல்லாதீங்கோ என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் கயல் சந்திரன்.
பேச்சு
கயல் சந்திரனின் ட்வீட்டை பார்த்த அஞ்சனாவோ, கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகப் போகுது. இன்னும் உனக்கு பேசத் தெரியல ஒழுங்கா என்று பதில் போட்டுள்ளார்.

அனுபவம்
கயல் சந்திரனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன ப்ரோ ஏதாவது சொல்லி அஞ்சனாவிடம் அடி வாங்கிவிட்டீர்களா. அஞ்சனா உங்களை அடிக்கிறார்களா என்று கேட்டுள்ளனர்.

ஆர்வம்
யார் போட்டோவை காட்டி அழகா இருக்கிறாரா என்று அஞ்சனா கேட்டாங்க ப்ரோ என்று கயல் சந்திரனிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர். சந்திரனுக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











