»   »  அஞ்சு அரவிந்த்தும் விவாகரத்து ஆனார்!

அஞ்சு அரவிந்த்தும் விவாகரத்து ஆனார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை அஞ்சு அரவிந்த்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

கடந்த சில நாட்களாக விவாகரத்து பெறும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலில்பார்த்திபன்-சீதா, பின்னர் டாக்டர் ஷர்மிளா-மோகன். அதன் பின்னர் விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகைகள்சுகன்யா, சொர்ணமால்யா, பாபிலோனா என பலரும் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டுள்ளனர்.

இந் நிலையில் அஞ்சு அரவிந்த்துக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவரான அஞ்சு,தேவதாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். கல்யாணம் ஆன சில நாட்களிலேயே மனக்கசப்புஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் சட்டப்பூர்வமாக பிரிய முடிவு செய்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனுசெய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பன் விவாகரத்து உத்தரவை பிறப்பித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil