»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

செக்ஸ் தொல்லை காரணமாக பிரபல தெலுங்கு நடிகை அங்கீதா தற்கொலைக்கு முயற்சித்தார்.

அங்கீதா மும்பையைச் சேர்ந்தவர். இவர் இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜுனியர் என்.டி. ஆர்.ஆதித்யாவுடன் இணைந்து நடித்த சிம்மாத்திரி படம் அங்கு சூப்பர் ஹிட் ஆனது.

அதையடுத்து அங்கீதா தெலுங்கில் பிஸியான நடிகையாகிவிட்டார். க்ற்போது தமிழில் சுந்தர். சி இயக்கும் லண்டன் படத்தில்பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதோடு மனசு மட்ட வினது என்ற தெலுங்குப் படத்திலும் இளம் நடிகர் நவ்தீப்புக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நவ்தீப்,தமிழில் நடிகை ராதிகா தயாரித்த ஜெய்ராம் படத்தில் ஹீரோவாக நடித்தவர்.

தற்போது அறிந்தும் அறியாமலும் படத்திலும்நடித்து வருகிறார்.

நவ்தீப் தெலுங்கில் வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகராவார். இவர் ஹீரோவாகவும், அங்கீதா ஹீரோயினாகவும் நடிக்கும்மனசு மட்ட வினது படத்தை இயக்குநர் வி.டி. ஆதித்யா இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பிற்காக நவ்தீப், அங்கீதா மற்றும் படக்குழுவினர் மொரீசியஸ் நாட்டிற்கு சென்றனர். அங்கு நவ்தீப், அங்கீதாவைஅடிக்கடி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு அங்கீதா உடன்படவில்லை.

ஆனாலும் நவ்தீப் விடவில்லை. காதல் காட்சிகளில் அங்கீதாவின் உடலில் எசகுபிசகாக கையை வைத்து தெந்தரவுசெய்திருக்கிறார். அதோடு ஆபாசமாகவும் பேசியிருக்கிறார்.

இதை அவ்வப்போது அங்கீதா கண்டித்து வந்தாலும், நவ்தீப்தின் தொடர்ந்து தொந்தரவு செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் மிகுந்து நவ்தீப்பின் கன்னத்தில் அங்கீதா ஓங்கி அடித்துவிட்டார். இதனால் கோபமான நவ்தீப்படக்குழுவினர் முன்னிலையில் அங்கீதாவை அசிங்கமாகத் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அங்கீதா தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். இது தெரிந்து, அங்கீதாவின் தாய் சாரதாஜவாரி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சாரதா நிருபர்களிடம் கூறுகையில், இந்த படம் தொடங்கியதில் இருந்து நவ்தீப் செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார்.மொரிஷியல் சென்றதும் அவரது தொந்தரவு அதிகரித்தது.

நிறைய தடவை அங்கீதா அவரிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சிக் கேட்டார். ஆனாலும் அவர் சில்மிஷம் செய்வதைவிடவில்லை.

இதனால் அங்கீதா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்தார் என்று கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகை மாளவிகாவிடம் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சில்மிஷம் செய்தது பெரிய பிரச்சனையாகஉருவெடுத்தது.

அதையடுத்து தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கப் போன நம்ம ஸ்னேகாவிடம் ஜூனியர் என்.டி.ஆர். அத்துமீறி நடக்க முயல,இனி தெலுங்குப் படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்னேகா.

இப்போது இதே ரீதியான பிரச்சினையில் அங்கீதா தற்கொலைக்கு முயன்றது தெலுங்குப் படவுலகத்தைஅதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil