திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஆன்னா ராஜன் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெற்ற வெளிப்பாடின்டே புஸ்தகம் படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தவர் ஆன்னா ராஜன். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அவரிடம் நீங்கள் மம்மூட்டி, துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது.
மம்மூட்டி
மம்மூட்டி ஹீரோ என்றால் துல்கர் அப்பாவாக நடிக்கட்டும், துல்கர் ஹீரோ என்றால் மம்மூட்டி அப்பாவாக நடிக்கட்டும் என்றாராம் ஆன்னா. ஆனால் துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறேன், மம்மூட்டி அப்பாவாக நடிக்கட்டும் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியதாம்.
கோபம்
ஆன்னா ராஜனின் பதிலை கேட்டு மம்மூட்டி ரசிகர்கள் கடும் கோபம் அடைந்து அவரை சமூக வலைதளங்களில் அசிங்கமாக திட்டினர். பாட்டிம்மா என்று கூறி மீம்ஸ் போட்டனர்.
மோகன்லால்
மோகன்லால் பட ஹீரோயின் என்பதால் மம்மூட்டியை கலாய்ப்பதா என்று ஆன்னாவை மம்மூட்டி ரசிகர்கள் திட்டினர். இந்நிலையில் மம்மூட்டியே ஆன்னாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்.
மன்னிப்பு
சமூக வலைதளங்களில் நடப்பதை பார்த்த ஆன்னா மம்மூட்டி மற்றும் அவரது ரசிகர்களிடம் ஃபேஸ்புக் லைவ் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். கண்ணீர் மல்க அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.