அடேங்கப்பா...ரெக்கார்டு பிரேக் தான்...இத்தனை தியேட்டர்களில் ரிலீசாகிறதா அண்ணாத்த

சென்னை : 2010 ல் எந்திரன், 2019 ல் பேட்ட படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கி உள்ள இந்த படம் தீபாவளி நாளான நவம்பர் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது.

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்பட்டது. இதில் வேஷ்டி சட்டையில், கிராமத்து கெட்அப்பில், இளமை தோற்றத்துடன் ரஜினி தோன்றியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்

ரஜினியின் பஞ்ச் டயலாக்

மோஷன் போஸ்டரில் வேஷ்டி சட்டையில், கொல்கத்தா சாலையில், தலையில் ஹெல்மெட், இயர்போன் மாட்டியபடி, கையில் அறிவாளுடன், பைக்கில் வந்து ஆக்ஷனிலும் அசத்தினார் ரஜினி. மாஸான பஞ்ச் டயலாக்குகளுடன் வெளியான இந்த வீடியோ செம வைரலானது.

சாதனை படைத்த டிரைலர்

சாதனை படைத்த டிரைலர்

அக்டோபர் 27 ம் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் வில்லன், காமெடியன், ஹீரோயின் என அனைத்து கேரக்டர்களையும் காட்டி விட்டார்கள். அண்ணாத்த படத்தின் முக்கிய காட்சியே கொல்கத்தாவில் தான் செட் அமைத்து எடுக்கப்பட்டது. இந்த டிரைலர் வெளியிடப்பட்ட நான்கே நாட்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, புதிய சாதனை படைத்துள்ளது.

அனைவரையும் ஈர்த்த டயலாக்

அனைவரையும் ஈர்த்த டயலாக்

80, 90 களில் வெளியான ரஜினி படங்களில் வருவது போன்ற பஞ்ச் டயலாக்குகள் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. கொல்கத்தாவுக்கே காப்பு கட்டிடேன். உன்னை எங்க ஊரு மதுரை வீரனுக்கு நேந்து விட்டுடேன்னு ரஜினி பேசும் டயலாக்குகள் அனைவரையும் ஈர்த்துள்ளது. இதனால் படம் எப்போ ரிலீசாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் ரிலீஸ்

வெளிநாடுகளில் ரிலீஸ்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக அண்ணாத்த படத்தை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ். ரஜினிக்கு வெளிநாடுகளிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் வெளி நாடுகளில் அதிக தியேட்டர்களில் அண்ணாத்த படத்த ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Recommended Video

பேரனுடன் ANNATHE படம் பார்த்த Superstar Rajinikanth | Soundarya Rajinikanth
இத்தனை தியேட்டர்களா

இத்தனை தியேட்டர்களா

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என வெளிநாடுகளில் 1100 க்கும் அதிகமான தியேட்டர்களில் அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள். அமெரிக்கா மற்றும் பிரான்சில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ள தமிழ் படம் அண்ணாத்த தான். அமெரிக்காவில் மட்டும் கிட்டதட்ட 500 தியேட்டர்களில் அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள்.

உலகம் முழுவதும் இவ்வளவா

உலகம் முழுவதும் இவ்வளவா

ஆஸ்திரேலியாவில் 60 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், நியூசிலாந்தில் 10, கனடாவில் 14, மலேசியாவில் 100, மத்திய கிழக்கு நாடுகளில் 80, சிங்கப்பூரில் 20, இலங்கையில் 30, ஐரோப்பாவில் 30 தியேட்டர்களில் அண்ணாத்த ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் அண்ணாத்த படத்தை விநியோகிக்கும் உரிமத்தை Qube cinema பெற்றுள்ளது.

டிக்கெட் புக்கிங்

டிக்கெட் புக்கிங்

தமிழகத்தில் தியேட்டர்களில் அண்ணாத்த விநியோக உரிமத்தை பெற்றுள்ளதாக உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணாத்த படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தின் டிக்கெட் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X