போட்றா வெடிய...10 மில்லியன் பார்வைகளை கடந்த அண்ணாத்த டிரைலர்
சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சத்யன், சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்ணாத்த படத்தை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது.

வைரலான அண்ணாத்த ஃபர்ஸ்ட்லுக்
அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10 ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை ரஜினி ரசிகர்கள் செம வைரலாக்கினர். நீண்ட இடைவெளிக்கு ரஜினி கிராமத்து கெட்அப்பில், இளமை தோற்றத்தில், செம எனர்ஜிடிக்காக நடித்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

10 மில்லியன் சாதனை
இதைத் தொடர்ந்து அக்டோபர் 4 ம் தேதி மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி, ரஜினிக்காக கடைசியாக பாடிய அண்ணாத்த...அண்ணாத்த பாடல் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டது. எனர்ஜிடிக்கான, பாசிடிவ் வரிகள் உடனான இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து, பாராட்டை பெற்றது. இந்த பாடல் யூட்யூப்பில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த சாதனை படைத்துள்ளதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்த ரிலீஸ்
ஃபஸ்ட் சிங்கிளை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் நயன்தாராவுடனான ரொமான்டிக்கான, சாரக்காற்று செகண்ட் சிங்கிள் பாடலையும், அதைத் தொடர்ந்து மருதாணி செவக்க செவக்க என்ற கல்யாண பாடல் மூன்றாவது சிங்கிளாகவும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடப்பட்டது. இந்த பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்தன.

சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க
இந்நிலையில் படம் ரிலீசாக சில நாட்களே உள்ளதால் அக்டோபர் 27 ம் தேதி அண்ணாத்த படத்தின் டிரைலர் படக்குழுவால் வெளியிடப்பட்டது. அண்ணன் - தங்கை பாசம், காமெடி, ரஜினி மற்றும் வில்லன்களின் பஞ்ச் டயலாக், காதல் என பலவற்றின் கலவையாக அமைந்திருந்த இந்த டிரைலர், படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க என அனைவரையும் கேட்க வைத்தது.

சாதனை படைத்த டிரைலர்
இந்த டிரைலர் வெளியிடப்பட்ட நான்கே நாட்களில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் 20 நாட்களில் படைத்த சாதனையை, டிரைலர் வெறும் நான்கே நாட்களில் முறியடித்துள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

தீபாவளிக்கு ரெடியா
டிரைலரே இந்த அளவிற்கு சாதனை படைத்தால் படம் ரிலீசான பிறகு இன்னும் எத்தனை சாதனைகள் முறியடிக்கப்பட போகிறதோ என பலர் கேட்க துவங்கி விட்டனர். ரஜினி ரசிகர்கள், ரஜினி ஸ்டைலிலேயே அண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா என சோஷியல் மீடியாக்களில் கேட்டு வருகின்றனர். டிரைலர் படைத்த சாதனையை ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











