போட்ரா வெடிய... அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? சும்மா அதிரப் போகுது

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கலக்கலாக உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தை வீரம், விவேகம்,விஸ்வாசம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கியிருந்த சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா,ஜெகபதி,யோகிபாபு, பிரகாஷ்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

படப்பிடிப்பு மொத்தமும் முடிக்கப்பட்டு டப்பிங் வேலைகள் விறுவிறு வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

அசத்தல் படங்கள்

அசத்தல் படங்கள்

சூப்பர் ஸ்டார் படங்கள் என்றாலே திரையரங்குகளில் மட்டும் அல்ல வீட்டிலேயும் ஆடம்பர ஆர்பாட்டமாகத்தான் இருக்கும் .ரஜினி படங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.இந்த கொரோனா காலகட்டத்திலும் அந்த எதிர்பார்ப்பும் ஆர்ப்பாட்டமும் குறையவில்லை.எப்போதும் கமர்சியல் ஹிட் கொடுக்கும் சிறுத்தை சிவாவுடன் சூப்பர் ஸ்டார் இணைவதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது

திருவிழா போல கலர்ஃபுல்லாக

திருவிழா போல கலர்ஃபுல்லாக

எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே திரையரங்குகளில் திருவிழா கோலம் தான். ஆனால் ஒரு திரைப்படமே திருவிழா போல கலர்ஃபுல்லாக உருவாகி வருகிறது என்றால் சொல்லவே தேவையில்லை அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். வீரம்,விவேகம், விஸ்வாசம், வேதாளம் என அஜித்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வந்த சிறுத்தை சிவா முதல்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ள இந்த திரைப்படம் வழக்கம் போக கமர்சியல் ஃபார்முலாவில் உருவாகி வருகிறது.

ரசிகர்களுக்கு மட்டுமல்ல

ரசிகர்களுக்கு மட்டுமல்ல

ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் சினிமா துறையே எதிர்பார்க்கும் படமாக இருக்கிறது அண்ணாத்த.அஜித்தை வைத்து சிறுத்தை சிவா பல படங்கள் இயக்கியதால் அஜித் படத்துடன் இப்படத்தை ஒப்பிட்டு காட்சிகள் ஒற்றுமை ,செண்டிமெண்ட் இருக்குமோ என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது .சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது .என்றும் இளமையுடன் ,கெத்தாக சூப்பர்ஸ்டார் இருக்கும் புகைப்படம் அனைவராலும் பெரும் அளவில் பகிரப்பட்டது.கூடவே நயன்தாரா என்றால் சும்மாவா நயன்தாரா ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா

இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா

ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பூ 90களில் பல திரைப்படங்களில் நடித்து கலக்கியுள்ளனர் இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அண்ணாத்த படத்தின் மூலம் இணைகின்றனர். இரண்டு விதமான காலகட்டங்களில் படக்கதை நடைபெறுவதால் பிளாஷ்பேக் கதையில் நடிகை மீனா மற்றும் குஷ்பூ வருவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா முதன்மை ரோலில் நடிக்கின்றனர். அதேசமயம் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது போல் சுவாரஸ்யமான பல கேள்விகளும் ,சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.

டப்பிங் பணிகளை

டப்பிங் பணிகளை

முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது பின் கொரோனா சூழல் காரணமாக தடைபட்டு மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெற இருந்த படப்பிடிப்பு பாதுகாப்பு காரணம் கருதி சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது. முக்கியமான சில காட்சிகளுக்காக மட்டும் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஹைதராபாத் சென்று நடித்து முடித்துள்ளனர்.சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சூப்பர்ஸ்டார் அமெரிக்கா சென்றதால் சில நாட்கள் படப்பிடிப்புகள் தள்ளிப்போனது, அதன் பிறகு முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது .தற்போது படப்பிடிப்பு மொத்தமும் முடிவு பெற்ற நிலையில் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது . அந்த வகையில் சென்ற வாரம் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழு அறிவித்திருந்ததையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.படம் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு கூடுதலாகவே ரசிகர்கள் மத்தியில் வந்து விட்டது .

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த நிலையில் நேற்று நடிகை மீனா அண்ணாத்த படத்தில் வரும் காட்சிகளுக்கு டப்பிங் செய்து முடித்து உள்ளதாக அறிவித்திருந்தார். மீனா டப்பிங் பேசிய புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டது .இவ்வாறு ஒவ்வொரு நடிகர்களும் தங்களது டப்பிங் பணிகளை முடித்து வர இப்பொழுது அட்டகாசமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சிறுத்தை சிவாவின் பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சும்மா கிழி

சும்மா கிழி

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை அதிவேகத்தில் செய்து வரும் படக்குழு இப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட ,தர்பார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ,அவரது மெகா ஹிட் படங்களின் வரிசையில் இதுவும் சேரும் என்று ரசிகர்கள் ,தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தவுடன் சும்மா அதிருத்துல என்று ரஜினி ரசிகர்கள் காலரை தூக்குவது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X