அண்ணாத்த மாஸுக்கே பாஸ்... 5 மில்லியன் சாதனையை கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து, குடும்ப என்டர்டைன்மென்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினி நீண்ட நாளைக்கு பிறகு முழுநேர கிராமத்து கதையில் நடித்துள்ள படம் அண்ணாத்த.

விநாயகர் சதுர்த்தியில் மோஷன் போஸ்டர்

விநாயகர் சதுர்த்தியில் மோஷன் போஸ்டர்

விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10 ம் தேதியன்று காலையில் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரும், மாலையில் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. கையில் நீண்ட அரிவாளுடன், வேஷ்டி சட்டையில் கெத்தாக பைக்கில் வந்து, ரஜினியின் மாஸ் டயலாக்குடன் வெளியிடப்பட்டது மோஷன் போஸ்டர். அதிரடியான இசையில் உருவாக்கப்பட்ட இந்த மோஷன் போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

மாஸான ஃபர்ஸ்ட் சிங்கிள்

மாஸான ஃபர்ஸ்ட் சிங்கிள்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அக்டோபர் 4 ம் தேதி மாலை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அண்ணாத்த...அண்ணாத்த என துவங்கும் பாடல் வெளியிடப்பட்டது. ரஜினி இன்ட்ரோ பாடலான இதை மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பிப.பாலசுப்ரமணியன் பாடி உள்ளார். ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசிய பாடல் இதுவாகும். இதனை முன்னிட்டு எஸ்பிபி பற்றி மிக உருக்கமாக ட்வீட் செய்திருந்தார் ரஜினி.

முடிவை மாற்றிய படக்குழு

முடிவை மாற்றிய படக்குழு

எஸ்பிபி.,க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது முதலாமாண்டு நினைவு தினத்தன்று இந்த பாடலை வெளியிடலாம் என முதலில் படக்குழு யோசித்தது. ஆனால் செம எனர்ஜிடிக், மாஸ் பாடலாக இதை ரஜினி ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடுவார்கள். அதனால் அவரது நினைவு நாளில் இந்த பாடலை வெளியிடுவதும், கொண்டாட்டங்கள் நடப்பதும் சரியாக இருக்காது என நினைத்து அக்டோபர் 4 ம் தேதி இந்த பாடலை படக்குழு வெளியிட்டது.

கொண்டாடிய சன் பிக்சர்ஸ்

கொண்டாடிய சன் பிக்சர்ஸ்

ரஜினியின் கேரக்டருக்கு ஏற்றது போன்ற வரிகள், பாசிடிவ்வான வார்த்தைகளை கொண்டு அமைக்கப்பட்ட இந்த பாடல் தாறுமாறாக வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இந்த பாடல் வெளியானது முதல் தொடர்ந்து இந்த பாடல் எப்படி இருக்கு, இதில் உங்களுக்கு பிடித்த வரி என்ன என்பது போல் தினம் ஒரு பாடல் கட் வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகிறது.

5 மில்லியன் சாதனை

5 மில்லியன் சாதனை

இந்நிலையில் அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் யூட்யூப்பில் 5 மில்லியன் பார்வைகள் என்ற சாதனையை கடந்துள்ளதை சன் பிக்சர்ஸ் உற்சாகத்துடன், மகிழ்ச்சி பொங்க, இமான் இசை வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 10 ம் தேதி வெளியிடப்பட்ட அண்ணாத்த மோஷன் போஸ்டர் இப்போது தான் 6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

குவியும் பஞ்ச் டயலாக்குகள்

குவியும் பஞ்ச் டயலாக்குகள்

ஆனால் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு 25 நாட்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்ட 4 நாட்களில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்துள்ளது. இதனை முன்னிட்டு இந்த பாடலில் வரும் ரஜினி பஞ்ச் காட்டும் வரிகளை குறிப்பிட்டு ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அண்ணாத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X