போட்றா விசில...அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள அண்ணாத்த படம் குடும்ப, பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஷுட்டிங் முடிவடைந்ததை தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ம் தேதி அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன வெளியிடப்பட்டன. ரஜினி ஏற்கனவே டப்பிங் உள்ளிட்ட தனது அனைத்து போர்ஷன்களையும் முடித்து விட்டார். மீதமுள்ள பணிகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியன்று ஒரே நாளில் டபுள் ட்ரீட்டாக காலையில் ஃபஸ்ட்லுக் போஸ்டரும், மாலையில் மோஷன் போஸ்டரும் வெளியிட்டனர். இதில் கையில் பெரிய அரிவாளுடன், வேஷ்டி சட்டையில் கிராமத்து கெட்அப்பில் பைக்கில் வரும் ரஜினி, மிரட்டலான சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரஜினியின் வேற லெவல் மாஸை இந்த படத்தில் பார்க்கலாம் என ஆர்வத்தை ரசிகர்களிடம் இந்த மோஷன் போஸ்டர் தூண்டி உள்ளது.
படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்தே, அண்ணாத்த படம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ரஜினியின் கேரக்டர் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ரஜினி கிராமத்து தலைவராக நடிப்பதாக ஏற்கனவே கூறி விட்டனர். அதுமட்டுமின்றி படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி பெரிய அண்ணன் ஃபீலை தருவதாக ரஜினியின் கேரக்டர் இருக்குமாம்.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தான் ஓபனிங் சாங்கை பாடி உள்ளார். அண்ணாத்த படம் நவம்பர் 4 ம் தேதி ரிலீசாவதால், டீசர், டிரைலர் போன்ற அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.
லேட்டஸ்ட் தகவலாக, அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 25 ம் தேதி ரிலீஸ் செய்ய போகிறார்களாம். மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி.,யின் முதல் நினைவு நாளான செப்டம்பர் 25 ம் தேதி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த ஃபஸ்ட் சிங்கிளில் எஸ்பிபி பாடிய ஓபனிங் பாடல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











