4 நாட்களில் ரூ. 150 கோடி வசூல்... ரெக்கார்டுகளை உடைத்த அண்ணாத்த!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
தீபாவளியையொட்டி தொடர்ந்து விடுமுறை தினங்களாக இருந்த நிலையில் இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படம் கடந்த 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை உலகெங்கிலும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து கடந்த 4ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கமர்ஷியல் படம்
ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு பிறகு வெளியான ரஜினிகாந்த்தின் இந்தப் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. கடந்த ஆண்டில் ரஜினியின் தர்பார் படம் வெளியான நிலையில் தற்போது அண்ணாத்த படம் ரிலீசாகியுள்ளது. கமர்ஷியல் படமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளும் கவனம் பெற்றுள்ளன,

அண்ணன் -தங்கை பாசம்
கடந்த சில படங்களில் ரஜினி மாறுப்பட்ட திரைக்கதைகளில் நடித்திருந்த நிலையில், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கமர்ஷியல் அவதாரத்தை எடுத்துள்ளார். அதை ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த மாதிரி தனக்கும் ஒரு சகோதரன் வேண்டும் என்று ரஜினியின் ரசிகைகள் கூறும் அளவிற்கு படம் அமைந்துள்ளது. கடந்த 4 நாட்கள் தீபாவளியையொட்டி விடுமுறை தினங்களாக அமைந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று படத்தை கொண்டாடினர்.

4 நாட்களில் ரூ.150 கோடி வசூல்
இந்நிலையில் இந்தப் படம் கடந்த 4 நாட்களில் ஏறக்குறைய 150 கோடி ரூபாயை உலகளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஜினியின் படங்கள் எப்போதும் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிடும். இந்நிலையில் இந்தப் படம் 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

படத்தின் பலம்
படத்தில் சிறப்பான பல அம்சங்களை ரசிகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து மேற்கொண்டுள்ளார் இயக்குநர் சிவா. ரஜினியின் முன்னாள் ஹீரோயின்களாக குஷ்பூ, மீனாவையும் படத்தில் பயன்படுத்தியுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதேபோல கீர்த்தி சுரேஷின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











