சாரல் சாரல் காற்றே...அசுத்தலாக ரொமான்ஸ் பொங்கும் அண்ணாத்த செகண்ட் சிங்கிள்

சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டைரக்டர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்த படம் தீபாவளி நாளான நவம்பர் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள், தீபாவளி ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாஸான மோஷன் போஸ்டர்

மாஸான மோஷன் போஸ்டர்

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10 ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை ரஜினி ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கினர். அதிரடியான இசையில், அட்டகாசமாக ரஜினியின் மாஸ் காட்டும் டயலாக்குடன் வெளியான மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

பட்டையை கிளப்பிய ஃபஸ்ட் சிங்கிள்

பட்டையை கிளப்பிய ஃபஸ்ட் சிங்கிள்

இதைத் தொடர்ந்து அக்டோபர் 4 ம் தேதி அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி பாடிய செம எனர்ஜிடிக்கான இந்த பாடல் ரஜினியின் கேரக்டரை கொண்டாடும் வகையில், பாசிடிவ் வார்த்தைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த அண்ணாத்த என துவங்கும் இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

சாதனை படைத்த அண்ணாத்த

சாதனை படைத்த அண்ணாத்த

ரிலீஸ் செய்யப்பட்ட 4 நாட்களில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த பாடல் சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை இரண்டு நாட்களுக்கு முன் சன் பிக்சர்ஸ், இமான் இசையமைக்கும் மேக்கிங் வீடியோவுடன் செம கலக்கலாக வெளியிட்டு கொண்டாடியது. இதனை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி, ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கினர்.

மெலடியான செகண்ட் சிங்கிள்

மெலடியான செகண்ட் சிங்கிள்

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியிடப்பட்டது. ஃபஸ்ட் சிங்கிள் செம எனர்ஜி என்றால், இரண்டாவது சிங்கிள் அதற்கு நேர் மாறாக காதல் பொங்கும், செம மெலடி பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. லிரிக்கல் வீடியோகவும் இந்த செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

சாரல்...சாரல்...காற்றே....என துவங்கும் இந்த பாடலில் நயன்தாராவுடன் வயல்வெளிகளில் ரஜினி சுற்றி திரிந்து, கிராமத்து சூழலில் காதலை பொழியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலையும் ரஜினி ரசிகர்கள் ரசித்து, பாராட்டி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இதனை பாராட்டி, கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X