என்ன சார் உதயநிதி ஸ்டாலினுடன் போட்டியா? .. அண்ணாமலைக்கு நெட்டிசன்கள் கேள்வி!

சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கன்னட படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அண்ணாமலையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் உதயநிதிக்கு போட்டியா? என கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. இரண்டையும் பிரிக்கவே முடியாது. சினிமாவிலிருந்து அரசியலுக்கும் அரசியலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களே பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர். சினிமாவில் நுழைந்து மக்கள் மனதை வென்றுவிட்டால் போதும், அரசியலில் உச்சத்தை அடைந்துவிடாமல் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அரசியலிலிருந்து சினிமாவில் நுழைந்துள்ளார். கன்னடத் திரைப்படமான 'அரபி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு கைககளும் இல்லாமல், சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை புரிந்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இப்படத்தில், விஸ்வாசின் பயிற்சியாளராக, அண்ணாமலை நடித்துள்ளார்.

ஒரு ரூபாய் சம்பளம்

ஒரு ரூபாய் சம்பளம்

இந்த படத்தில் நடித்ததற்காக அண்ணாமலை வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். அந்த ஒரு ரூபாயையும் ஐயப்பனுக்கு காணிக்கையாக்குவதாக தெரிவித்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி உள்ளது.

ஸ்டாலினுடன் போட்டியா?

ஸ்டாலினுடன் போட்டியா?

தமிழக பா.ஜ.க தலைவர் நடிகராக புது அவதாரம் எடுத்துள்ளதாக செய்திகள் கட்டுத்தீயாய்பரவியதை அடுத்து நெட்டிசன்ஸ் பலர் என்ன சார் உதயநிதி ஸ்டாலினுடன் போட்டியா? என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர். மேலும், பா.ஜ.கவினர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரபி திரைப்படத்தின் டீசர் சற்று முன்பு இணையத்தில் வெளியாகி உள்ளது.

கர்நாடக சிங்கம்

கர்நாடக சிங்கம்

கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொதுமக்களால் 'கர்நாடக சிங்கம்' என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X