»   »  படத்துலயும் அசிங்கப்படுத்துறீங்க... நிகழ்ச்சியிலேயும் அவமானப்படுத்துறீங்க... பாவம்ய்யா ஜூலி!

படத்துலயும் அசிங்கப்படுத்துறீங்க... நிகழ்ச்சியிலேயும் அவமானப்படுத்துறீங்க... பாவம்ய்யா ஜூலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாவம்ய்யா ஜூலி!-வீடியோ

சென்னை : விமல், ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயப்ரகாஷ், ஜூலி ஆகியோர் நடிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மன்னர் வகையறா'.

இந்தப் படம் ஆக்‌ஷன் காமெடி படமாக ஃபேமிலி சப்ஜெட்டில் உருவானது. 'மன்னர் வகையறா' படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், 'மன்னர் வகையறா' படக்குழுவினர் கலந்துகொண்ட ப்ரொமோஷனில் எரிச்சலூட்டும் நபர் என ஜூலியைக் குறிப்பிட்டிருக்கிறார் விமல்.

மன்னர் வகையறா

மன்னர் வகையறா

விமல், ஆனந்தி ஆகியோர் நடிப்பில் வெளியானது 'மன்னர் வகையறா' திரைப்படம். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ஜூலி. படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விமல், ஜூலி இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஜூலி எரிச்சலூட்டினார்

ஜூலி எரிச்சலூட்டினார்

அப்போது அவர்களை பேட்டி கண்டவர் விமலிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடிக்காத எரிச்சலூட்டும் நபர் யார்? ஓவியாவா, ஜூலியா? என கேட்டார். அதற்கு விமல் ஜூலியை தான் தேர்வு செய்தார். அருகில் அமர்ந்திருக்கும்போதே அவர் அப்படி கூறியது ஜூலிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

மணப்பெண் தோற்றத்தில் ஜூலி

மணப்பெண் தோற்றத்தில் ஜூலி

இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மணப்பெண் தோற்றத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ஜூலி. அவர் கல்யாண புரோக்கரின் பெண்ணாக வருகிறார். அவரை விமல் திருமணம் செய்யவிருப்பதாக நினைத்து, விமல் குடும்பத்தினர் 'நம்ம குடும்ப மானம் போயிரும்டா' எனக் கத்துவார்கள்.

மானம் போயிரும்

மானம் போயிரும்

நல்லவேளையாக, ஜூலிக்கு வேறொருவர் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்வார். ஜூலியை திருமணம் செய்யப்போவதாக நினைத்து விமல் குடும்பத்தினர், 'நம்ம குடும்ப மானம் போயிரும்டா' எனக் கத்தியதைப் பார்த்து, ரசிகர்கள் ஜூலியை கலாய்த்து கமென்ட் அடித்தனர்.

ஜூலி பாவம்

ஜூலி பாவம்

இப்படியாக, படத்தில் ஜூலியை கலாய்த்ததோடு, ப்ரொமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவைத்து அசிங்கப்படுத்துகிறார்கள். கெஸ்ட் ரோல் நடித்ததெற்கெல்லாம் ப்ரொமோஷனில் கலந்துகொள்வதே பெரிய விஷயம். அங்கும் ஜூலியை கார்னர் செய்தால் என்னதான் செய்வார்?

English summary
Vimal and julie participated in 'Mannar vagaiyara' promotion program. In this program, anchor asked vimal, "who is annoying person in biggboss show?". Vimal answered, "Julie is most annoying person in biggboss".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil