Just In
- 57 min ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 2 hrs ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- 2 hrs ago
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- 3 hrs ago
ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!
Don't Miss!
- News
ஒவ்வொரு நாளும் வெற்றி அல்ல.. நல்லதை எடுத்துக்கங்க!
- Automobiles
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- Finance
Budget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா?
- Lifestyle
குடியரசு தினத்தன்று வரலாறு படைக்க தயாராக இருக்கும் சிங்கப்பெண் சுவாதி ரத்தோரை பற்றித் தெரியுமா?
- Education
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அங்க பாலான்னா இங்க சோம்.. ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்கள் ஸ்கோரையும் எப்படி காலி பண்ணாரு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களே தூக்கத்தை விடுத்து விளையாடி வரும் நிலையில், சோமசேகர் தூங்கியதன் காரணமாக ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களின் ஸ்கோரும் காலி.
பந்து பிடிப்பதில் கில்லாடித் தனத்தை காட்டுகிறேன் என்கிற பேர் வழியில் தனது பந்தை விடுத்து, அடுத்தவரின் பந்தை பிடித்து ஒட்டுமொத்தமாக ஆப்பு வைத்து விட்டார் சோமசேகர்.
ஆனால், அவருக்கு அழகாக மூன்றாவது இடத்தை ஃபேவரிசம் காரணமாக தூக்கிக் கொடுத்து விட்டனர்.
அச்சு அசல் மறைந்த சீரியல் நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம் பெண்... தீயாய் பரவும் போட்டோஸ்!

நொந்துப் போன நூடுல்ஸ்
பந்து பிடிப்பதெல்லாம் ஒரு விளையாட்டா? மொக்கை டாஸ்க் என ஏளனம் பேசிய நிலையில், கடுப்பான பிக் பாஸ் டீம், இரவு முழுக்க தூங்காமல் விளையாடணும் என்றும், போட்டியாளர்களை பரபரக்க வைத்து பந்துகளை வேக வேகமாக போட்டு நொந்துப் போன நூடுல்ஸ் ஆக்கி விட்டனர்.

சொதப்பிய சோம்
பெண் போட்டியாளர்களே தூக்கத்தை மறந்து விளையாடி வரும் நிலையில், அழகிய தமிழ் மகன் சோமசேகர் தூங்கி வழிந்து விளையாடியதால், தனது ஆட்டத்தை கோட்டை விட்டது மட்டுமின்றி, அடுத்தவர்களின் ஆட்டத்துக்கும் ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்து விட்டார். சோம் பண்ண தவறு காரணமாக பல போட்டியாளர்களின் ஸ்கோர் ஜீரோவானது.

ஃபேவரிசம் தான்
அதிக புள்ளிகளை அள்ளிய நிலையில், ரியோ, ரம்யா முதல் இரு இடங்களை பிடித்துக் கொண்டனர். மூன்றாவது அதிக மதிப்பெண்களை பெற்ற கேபியை கடைசியில் தள்ளி விட்டு, மூன்றாவது இடத்தில் சோமசேகரை நிற்க வைத்து நல்லாவே ஃபேவரிசம் காட்டினர். பாலா அணியில் இருந்து கொண்டே அனிதாவும் சோமுக்கு தனது ஓட்டுப் போட்டு பாலாவை ஓரங்கட்டினார்.

இன்னொரு பாலா
ரெட் பாலை பிடித்து தனது டீமின் ஸ்கோரை அதள பாதாளத்துக்கு கொண்டு சென்று சோம் டீமிடம் அனைவரையும் தோற்றுப் போனவர்களாக ஆக்கி விட்டார் பாலா. அதே போலத்தான் சோமசேகரும் தனக்கு வந்த ஒரு பந்தை தவறவிட்டு, அடுத்தடுத்த பந்துகளை பிடித்து மற்றவர்கள் வாய்ப்பை கெடுத்து ஸ்கோரும் கிடைக்காமல் செய்து விட்டார்.

சர்ச்சை வெடிக்கும்
கேபிக்கு கடைசி இடம் கிடைத்தது. சோமசேகருக்கும் பாலாவுக்கும் மூன்றாம் இடமும் நான்கான் இடமும் கிடைத்தது நிச்சயம் பஞ்சாயத்தை கிளப்பும் என்றே தெரிகிறது. ஆரியும், அனிதாவும் நிச்சயம் இந்த இரு இடங்கள் பற்றி நிச்சயம் விவாதிப்பார்கள், இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ஏமாற்றும் விஜய் டிவி
பந்து பிடிப்பதில் ரியோ தான் கில்லாடியாக செயல்பட்டார் என்பது போலவே விஜய் டிவி காட்டியது. ஆனால், மூன்று பந்துகளை ரியோ விட்டதை ஆரி சுட்டிக் காட்டிய நிலையில், சமூக வலைதளத்தில் ரியோவுக்கு முதலிடத்திற்கான தகுதியே கிடையாது என்றும், அவரை டைட்டில் வின்னராக்க விஜய் டிவி மக்களை ஏமாற்றுகிறது என்றும் விளாசி வருகின்றனர்.