பிக்பாஸ் சீசன் 5 கன்ஃபார்ம் போட்டியாளர்கள்... இவங்கள எதிர்பார்க்கலியே

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக கமல், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஒரு டயலாக் பேசுவார். அது கடந்த 4 சீசன்களில் நடந்ததோ இல்லையோ. ஆனால் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் முன்னரே நிறைய நடக்கிறது.

Recommended Video

Bigg Boss 5 Confirmed Contestant List | Kamal Hassan, BB 5 Grand Launch

போட்டியாளர்கள், விதிகள் என அடுத்தடுத்து பல ட்விஸ்ட்களை வைத்து வருகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இன்று மாலை துவங்க போகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பெயர்கள் வெளியாகி வருகிறது.

கன்ஃபார்ம் போட்டியாளர்கள் என இதுவரை சொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல, இதுவரை எதிர்பார்க்காத சிலரின் பெயர்களும் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல ஆச்சரியங்களை கொடுத்து வருகிறது.

லேட்டஸ்ட் லிஸ்ட்

லேட்டஸ்ட் லிஸ்ட்

லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ள கன்ஃபார்ம் போட்டியாளர்கள் பட்டியலில் விஜய் டிவி தொகுப்பாளர் விஜே பிரியங்கா, நடிகர் அபினய் வட்டி, நாட்டுப்புற பாடகி சின்னபொண்ணு, சின்னத்திரை நடிகையும் மாடலுமான பவானி ரெட்டி, மலேசிய மாடல் நதியா சாங், நடிகர் வருண் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை வெளியான பட்டியல்

இதுவரை வெளியான பட்டியல்

ஏற்கனவே நமீதா மாரிமுத்து, அபிஷேக் ராஜா, மதுமிதா, ராஜு ஜெயமோகன், கானா இசைவாணி ஆகியோரின் பெயர்கள் கன்ஃபார்ம் போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுவதால் மீதமுள்ள போட்டியாளர்கள் யார், 18 பேரும் இன்றே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்களா என்பது போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இவங்க இல்லையா

இவங்க இல்லையா

ஜிபி முத்து, மிலா போன்றவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வார்களா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. போட்டியாளர்கள் பற்றி பல தகவல்கள் வெளி வந்தாலும், இறுதியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறவர்கள் யார் என்பது இன்று மாலை 6 மணிக்கு பிறகே தெரிய வரும்.

இது தான் விஷயமா

இது தான் விஷயமா

சிலரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வரை போஸ்ட்கள் பதிவாகி வருவதால் அவர்கள் பிக்பாஸில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்பட்டது. ஆனால் இந்த ஃபோட்டோக்கள் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமையில் இருப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும், தற்போது அவர்களின் சோஷியல் மீடியா கணக்குகள் வேறு ஒருவரால் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ட்விஸ்ட் ஏதாவது இருக்குமா

ட்விஸ்ட் ஏதாவது இருக்குமா

இதனால் இறுதி போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதிலும் விஜய் டிவி எதிர்பார்க்காத ட்விஸ்ட் எதாவது வைக்க போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X