அட்லீ வலையில் சிக்கிய அடுத்த பாலிவுட் திமிங்கலம்… ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கானுடன் கூட்டணி?

சென்னை: அட்லீ தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் அவரது 'தளபதி 68' படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதனிடையே ஷாருக்கானை தொடர்ந்து மற்றுமொரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு அட்லீ கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானின் ஜவான்

ஷாருக்கானின் ஜவான்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி லைம் லைட்டுக்கு வந்தவர் அட்லீ. ஷங்கரின் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ள அட்லீ, அதை நிரூபிக்கும் வகையில் அவர் இயக்கும் படங்களில் பிரம்மாண்டமான காட்சிகளை எடுத்து ஸ்கோர் செய்து வருகிறார். பழைய ஹிட் படங்களின் கதைகளை தூசி தட்டி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து படம் இயக்குவதில் அட்லீ தான் கெட்டிக்காரர் என நெட்டிசன்கள் விமர்சிப்பது உண்டு. இந்நிலையில், தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் அப்டேட்

விரைவில் அப்டேட்

ஷாருக்கானுடன் நயன்தார, பிரியாமணி, யோகி பாபு, வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மும்பை, சென்னை என மாறி மாறி படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஜவான், அடுத்த வருடன் ஜூன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில், ஜவான் படத்தில் விஜய் நடிப்பது குறித்து விரைவில் அப்டேட் ஏதும் வெளியாகலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேபோல் ஜவானை தொடர்ந்து விஜய்யின் 'தளபதி 68' படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி வைரலாகி இருந்தது.

சல்மான் கானுடன் கூட்டணி

சல்மான் கானுடன் கூட்டணி

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜவான், தளபதி 68 படங்களுக்குப் பிறகு அட்லீ இயக்கும் படத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. சல்மான் கானுக்கு அட்லீ கதை கூறிவிட்டதாகவும், அதற்கு அவரும் ஓக்கே சொல்லிட்டார் எனவும் தெரிகிறது. ஷாருக்கான், சல்மான் கான் என அடுத்தடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் அட்லீ இணைவது கோலிவுட் பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட பட்ஜெட்

பிரம்மாண்ட பட்ஜெட்

அட்லீ - சல்மான் கான் இணையும் படம் தளபதி 68க்கு பிறகு தான் நடக்கும் எனவும் இப்போதைக்கு கூறப்படுகிறது. விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருவதுடன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' நடிக்கிறார். அதன்பிறகே அட்லீயுடன் விஜய் இணையலாம் என தெரிகிறது. அதற்குள் அட்லீ ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் முடிந்துவிட்டால், அடுத்து தளபதி 68 உடனே தொடங்கும் என எதிர்பார்க்கலாம். அதேநேரம் சல்மான் கான் நடிப்பில் அட்லீ இயக்கும் படம் நிச்சயமாக பிரம்மாண்டமான படைப்பாக தான் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X