பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அடுத்த "S" போட்டியாளர்

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து S என்ற எழுத்தில் பெயர் கொண்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இந்த வாரமும் மற்றொரு S போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஜனவரி 31 ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சினிமா ஷுட்டிங் காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் கமல்.

நெருங்கும் ஃபைனல்ஸ்

நெருங்கும் ஃபைனல்ஸ்

தற்போது கமலுக்கு பதில் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களைக் கடந்து கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். டாஸ்குகளும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் போட்டியாளர்களிடையே மோதலும் கடுமையாகி வருகிறது. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

வெளியேறிய போட்டியாளர்கள்

வெளியேறிய போட்டியாளர்கள்

இதில் சுஜா வருணி, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, சிநேகன், அபினய், ஷாரிக், அனிதா ஆகியோர் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்ட சுரேஷ் தாத்தா மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தார். போட்டியாளர்களால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வனிதா விஜயக்குமார் பாதிலேயே வெளியேறினார். அவரைப் போல் சுரேஷ் தாத்தாவும் உடல்நிலையை காரணமாக சொல்லி பாதியில் வெளியேறினார்.

இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர்

இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர்

வைல்ட் கார்டு என்ட்ரியாக கலக்க போவது யாரு சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் தீனா ஆகியோர் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரியாக அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பாலா, ஜுலி, சதீஷ், சுருதி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் மிகக் குறைந்த ஓட்டுக்களுடன் இந்த வாரம் சதீஷ் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலா தான் டாப்

பாலா தான் டாப்

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் அதிக ஓட்டுக்களுடன் பாலா தான் முதல் இடத்தில் இருக்கிறாராம். டாஸ்குகளின் போது பெண் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொள்வதாக பாலா மீது தான் அதிக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பாலா டாப்பில் இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாலாவை தொடர்ந்து ஜுலி, சுருதி ஆகியோர் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளனர். வீட்டில் உள்ள போட்டியாளர்களிலேயே சதீஷ் மற்றும் அபிராமி மிக குறைவான ஓட்டுக்களுடன் பின்னால் உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X