மாநாடு படம் மாதிரி சிங்கிள் ஷாட்ல இன்னொரு தரமான ஸ்டண்ட்: சிம்பு ரசிகர்களுக்கான ஆக்சன் அப்டேட் இதோ!
சென்னை: சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கெளதம், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் 3வது முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இருந்து மாஸ்ஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா மேஜிக்
சிம்புவின் கேரியரில் ரொம்பவே முக்கியமான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்பது அனைவருக்குமே தெரிந்தது. கெளதம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தில், சிம்புவும் த்ரிஷாவும் ரொமண்ஸ் மோடில் ரசிகர்களை உருக வைத்திருப்பார்கள். இந்தப் படம் சிம்புவிற்கு மட்டும் அல்லாமல், தமிழ் சினிமாவிலும் முக்கியமான படம் என ரசிகர்கள் கூறுவதுண்டு.

அச்சம் என்பது மடமையடா மாஸ்
'விண்ணைத்தாண்டி வருவாயா' வெற்றியைத் தொடர்ந்து சிம்பு, கெளதம், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி, 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் மீண்டும் இணைந்தது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், சிம்புவின் ஆக்சனில் மாஸ் காட்டியது. இதனால், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த மூவர் கூட்டணி, மறுபடியும் இணைய வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

எதிர்பார்ப்பில் வெந்து தணிந்தது காடு
ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தற்போது சிம்பு, கெளதம், ரஹ்மான் கூட்டணியில் 'வெந்து தணிந்தது காடு' படம் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது. ஏற்கனவே டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி, ரசிகர்களை வைப்ரேஷன் மோடில் வைத்துள்ளது. சிம்புவுடன் சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிங்கிள் ஷாட் ஃபைட் சீன்
கடந்த வருடம் சிம்புவின் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம், மெகா ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் ஒரு சண்டைக் காட்சியில், சிம்பு சிங்கிளி டேக்கில் ஒரு சண்டைக் காட்சியில் நடித்து மிரட்டியிருப்பார். இப்போது அதேபோல் 'வெந்து தணிந்தது காடு' படத்திலும், ஒரு ஆக்சன் சீன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த சண்டைக் காட்சி உருவாகியுள்ளதாகவும், இதிலும் சிம்புவின் அதிரடி தரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய அப்டேட்டால், சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











