»   »  ரஜினி ரசிகர்களுக்கு புதிய விருந்து... கபாலி புதிய பாடல் டீசர் ரிலீசாகியது

ரஜினி ரசிகர்களுக்கு புதிய விருந்து... கபாலி புதிய பாடல் டீசர் ரிலீசாகியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் புதிய பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Another treat for Rajini fans

கடந்தமாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் பாடல்கள் வெளியிடப்பட்டது. பெரிய விழாவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஆடியோ ரிலீஸ், ரஜினி வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் எளிமையாக இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது கபாலி படத்தின் அடுத்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Producer Thanu has said in his twitter page that Kabali song teaser will be releasing today at 8 pm.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil