»   »  மீண்டும் சின்னத்திரைக்கு வரும் அனு ஹாஸன்!

மீண்டும் சின்னத்திரைக்கு வரும் அனு ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸில் மேலும் ஒரு புதுவரவா ? / மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஹாஸன்! -வீடியோ

சென்னை : கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் அனுஹாசன். 'இந்திரா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

இப்போது தொகுப்பாளர் டி.டி நடத்தும் காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு முன்பு அந்த நிகழ்ச்சியை காபி வித்த அனு என்ற நிகழ்ச்சியாக நடத்தியவர் அனுஹாசன்.

அன்புள்ள சினேகிதியே, ரேகா ஐ.பி.எஸ், உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்தார் அனுஹாசன். அனு அளவும் பயமில்லை, என் சமையல் அறையில் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தினார்.

திருமணம் :

திருமணம் :

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'வல்லதேசம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளிநாட்டில் நடப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட படம். இதில் அனுஹாசன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

சண்டைக் காட்சிகளிலும் :

சண்டைக் காட்சிகளிலும் :

களரிப் பயிற்சி பெற்ற அனுஹாசன் சண்டை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளாராம். 'வல்லதேசம்' படம் வருகிற 15-ம் தேதி வெளிவருகிறது. அதையொட்டி தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் சென்னைக்குத் திரும்பி விட்டார் அனுஹாசன்.

கமல் வரச் சொன்னார் :

கமல் வரச் சொன்னார் :

இந்தியாவுக்கு வர நினைத்ததும், சென்னையில் இருக்கும் தனது அக்கா சுஹாசினி மற்றும் சித்தப்பா கமல் மற்றும் அத்தை நளினிக்கு போன் செய்ததாகவும் 'உடனே கிளம்பி வா' என மூன்று பேரிடமிருந்தும் பதில் வந்ததால் வந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார் அனுஹாசன்.

சினிமா வாய்ப்புகள் :

சினிமா வாய்ப்புகள் :

இனி நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட முடிவெடுத்திருக்கும் அனுஹாசன், சினிமாவில் நடிக்க தொடர்ந்து கதை கேட்டு வருகிறார். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் விரைவில் வேறு படங்களிலும் அனுஹாசனைப் பார்க்கலாம்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் :

சின்னத்திரை நிகழ்ச்சிகள் :

தொடர்ந்து டி.வி நிகழ்ச்சி நடத்தவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விஜய் டி.வி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் அனுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. விரைவில் சின்னத்திரையிலும் வலம் வர இருக்கிறார் அனுஹாசன்.

English summary
Kamal Haasan's brother's daughter Anuhaasan comes back to cinema with 'Valladhesam'. Anuhassan has decided to stay permanently in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil