»   »  அனுராதாவின் கணவர் மரணம்

அனுராதாவின் கணவர் மரணம்

Subscribe to Oneindia Tamil


முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதாவின் கணவரும், நடிகை அபிநயஸ்ரீயின் தந்தையுமான முன்னாள் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் மரணமடைந்தார்.

Click here for more images

முன்னாள் கவர்ச்சி நடிகையான அனுராதா, டான்ஸ் மாஸ்டரான சதீஷைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்குப் பின்னர் சதீஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டோடு இருந்து வந்தார்.

அனுராதா, சதீஷ் தம்பதிகளுக்கு நடிகை அபிநயஸ்ரீ மற்றும் காளிச்சரண் என இரு குழந்தைகள். தனது மகனையும் நடிகராக்க முயன்று வந்தார் அனுராதா.

இந்த நிலையில் நீண்ட காலமாக உடல் நலமின்றி இருந்து வந்த சதீஷ் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். அனுராதா, அபிநயஸ்ரீக்கு ஆறுதல் கூறினர். பின்னர் சதீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது.

Read more about: anuradha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil