Just In
- 29 min ago
இன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம்.. ஏமாற்றிய பிரபல டிவி நடிகைகள்? வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!
- 42 min ago
குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி!
- 51 min ago
அறிவே இல்லையா.. தியேட்டர் ஸ்க்ரீனில் ரத்தத்தால் பவன் கல்யாண் பெயர் எழுதிய ரசிகர்.. வைரலாகும் வீடியோ
- 1 hr ago
சண்டை கோழிங்க ரெண்டும் சமாதானம் ஆகிடுச்சே.. விருது வென்ற டாப்சியை பாராட்டிய கங்கனா ரனாவத்!
Don't Miss!
- News
தீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்!
- Automobiles
சென்னையில் வாகனத்தின் உரிமையை மாற்றுவது எப்படி? இந்தளவுக்கு தெளிவா ஆர்டிஓ ஸ்டாஃப் கூட சொல்ல மாட்டாங்க...
- Sports
என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்
- Finance
தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..?!
- Lifestyle
கார்ன் மெத்தி மலாய் கிரேவி
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மடியை விட மாட்டார் போல.. வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு அனுராக் காஷ்யப் வெளியிட்ட அதிரடி போஸ்ட்!
மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்சிக்கு சொந்தமான இடங்களில் கடந்த மார்ச் 3ம் தேதி வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று செம கூலாக மீண்டும் நடிகை டாப்சியின் மடியில் அமர்ந்து கொண்டு தோபாரா படத்தை நாங்கள் ஆரம்பித்து விட்டோம் என அனுராக் போட்டுள்ள அதிரடியான இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
ஃபோட்டோ எடுத்த ரசிகரை தாக்கிய பாலகிருஷ்ணா...வைரலாகும் வீடியோ
பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக டாப்சி மற்றும் அனுராக்கின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

650 கோடிக்கும் மேல்
650 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாக நடிகை டாப்ஸி, அனுராக் காஷ்யாப், விக்ரமாதித்யா மோத்வானி மற்றும் பாண்டம் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் 3ம் தேதி சோதனை நடத்தினர். சுமார் 650 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாக தகவல்களும் வெளியாகின.

கிண்டலடித்த டாப்சி
வருமான வரித்துறை சோதனை முடிவுற்ற நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக பதிவிட்ட நடிகை டாப்சி, வாங்காத வெளிநாட்டின் சாவியை தீவிரமாக தேடினர் அது கிடைக்கவில்லை. அதே போல நான் வேண்டாமென சொன்ன 5 கோடி ரூபாய்க்கான செக்கையும் தேடி அலைந்தனர் என கிண்டலடித்து பதிவிட்டு இருந்தார்.

டாப்சி மடியில் அமர்ந்து
பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் மீண்டும் நடிகை டாப்சியின் மடி மீது அமர்ந்து கொண்டு, செம கூலாக நாங்க தோபாரா படப்பிடிப்பை தொடங்கி விட்டோம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். டாப்சி மற்றும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக சில பிரபலங்களும் அவர்களது ரசிகர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளை விமர்சித்து வருகின்றனர்.

ஹேட்டர்களுக்கு நன்றி
மேலும், அந்த போட்டோவுக்கு அனுராக் காஷ்யப் போட்டுள்ள கேப்ஷனில் ஹேட்டர்களுக்கு எங்களின் அன்பும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் புது பாய் பிரெண்டான சாந்தனு ஹசாரிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த போட்டோவுக்கு லைக் போட்டுள்ளனர்.

தோபாராவில் நாசர்
இந்திய திரையுலகில் பல மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் நாசர் சார் உடன் தோபாரா படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியை அளிக்கிறது என நாசர் உடன் இருக்கும் புகைப்படத்தையும் இயக்குநர் அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான தீனி படத்தில் மாஸ்டர் செஃப் ஆக கலக்கிய நாசர் இந்தி படமான தோபாராவில் அசத்த உள்ளார்.