»   »  கமல் - விக்ரமின் கலவை அனுஷ்கா! - இயக்குநர் மோகன் ராஜா

கமல் - விக்ரமின் கலவை அனுஷ்கா! - இயக்குநர் மோகன் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன், விக்ரம் ஆகியோரின் கலவையாக நான் அனுஷ்காவைப் பார்க்கிறேன் என்று இயக்குநர் மோகன் ராஜா கூறினார்.

இஞ்சி இடுப்பழகி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது. அனுஷ்கா-ஆர்யா நடித்துள்ள இந்தப் படத்துக்கு மரகதமணி இசையமைத்துள்ளார். பிரகாஷ் ராவ் இயக்கியுள்ளார்.

Anushka is mixture of Kamal and Vikram, says Mohan Raja

இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், நடிகர் ஆர்யா, அனுஷ்கா, நாசர், கிருஷ்ணா, இயக்குனர் மோகன்ராஜா, இயக்குனர் திருமணி புகழேந்தி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஏ.எல்.அழகப்பன், சிவி.குமார், சிவா, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் டிரைலரை இயக்குநர் மோகன்ராஜா வெளியிட்டு பேசுகையில், "இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பற்றி பரவலான ஒரு கருத்து அனைவரிடமும் இருந்து வருகிறது. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கு இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

எண்பதுகளில் இயக்குனர் பாக்யராஜ் உடல் பருமனை மையமாக வைத்து ‘சின்ன வீடு' என்ற படத்தை கொடுத்தார். அது அன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியது. அதேபோல், இந்தப் படம் இன்றைய காலகட்டத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

படத்தின் நாயகி அனுஷ்கா இதுவரை எனக்கு அறிமுகமில்லை. ஆனால், அவருடைய படங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அனுஷ்காவின் நடிப்பைப் பார்க்கும்போது, கமல், விக்ரமின் கலவையாக நான் உணர்கிறேன். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது," என்றார்.

English summary
Director Mohan Raja says that he sees Anushka as the mixture of Kamal Hassan and Vikram in acting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil