»   »  அய்யய்யோ, அனுஷ்கா மேற்கிந்திய தீவுகளுக்கு போயிருக்கிறாரே: கிரிக்கெட் ரசிகர்கள் கவலை

அய்யய்யோ, அனுஷ்கா மேற்கிந்திய தீவுகளுக்கு போயிருக்கிறாரே: கிரிக்கெட் ரசிகர்கள் கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

செயின்ட் லூசியா: மேற்கிந்திய தீவுகளில் அந்நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வரும் தனது காதலர் விராட் கோஹ்லியை உற்சாகப்படுத்த நடிகை அனுஷ்கா சர்மா செயின்ட் லூசியா சென்றுள்ளார்.

சுல்தான் பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள அனுஷ்கா சர்மா கரண் கோஹரின் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ஷாருக்கானுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

அடுத்த பட வேலைகளை துவங்கும் முன்பு அவர் தனது காதலர் கோஹ்லியுடன் நேரம் செலவிட விரும்பினார்.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

அனுஷ்கா

அனுஷ்கா

காதலரை உற்சாகப்படுத்த அனுஷ்கா மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார். செயின்ட் லூசியாவில் இருக்கும் டாரன் சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியை அனுஷ்கா கண்டுகளித்தார்.

கோஹ்லி

கோஹ்லி

ஜீன்ஸ், டி-சர்ட்டில் வந்திருந்த அனுஷ்கா ஸ்டேடியத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தாரோடு பேசிப் பழகினார். மேலும் கோஹ்லியுடன் நேரம் செலவிட்டார்.

அய்யய்யோ

அய்யய்யோ

அனுஷ்கா சர்மா ஒரு போட்டியை நேரில் காண ஸ்டேடியத்திற்கு வந்தால் இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்று ரசிகர்களிடையே ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் அனுஷ்கா தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

English summary
Actress Anushka Sharma has flown to St. Lucia to cheer her boy friend Virat Kohli. India is palying test series against West Indies cricket team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil