»   »  கோஹ்லிக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் புத்தாண்டில் நிச்சயதார்த்தமா?: உண்மை இதோ

கோஹ்லிக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் புத்தாண்டில் நிச்சயதார்த்தமா?: உண்மை இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் புத்தாண்டு தினத்தில் நிச்சயதார்த்தம் என்ற செய்தி தீயாக பரவியது.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் காதலித்து வருகிறார்கள். இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரிந்த அவர்கள் சில மாதங்களில் மீண்டும் சேர்ந்துவிட்டனர்.

திருமணம் தொடர்பான பிரச்சனையால் பிரிந்து பின்னர் சேர்ந்தனர்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

கோஹ்லியும், அனுஷ்காவும் ஜோடியாக உத்தரகண்ட் சென்றுள்ளனர். அவர்களுடன் அவர்களின் குடும்பத்தாரும் சென்றுள்ளனர். இதனால் புத்தாண்டு அன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் என்ற தகவல் தீயாக பரவியது.

அனுஷ்கா

அனுஷ்கா

கோஹ்லிக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்ய ஆசை. ஆனால் அனுஷ்காவோ திருமணத்தை பற்றி நினைக்க தற்போது நேரம் இல்லை என்று கூறி வருகிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

திருமணத்தை பற்றி யோசிக்காத அனுஷ்கா நிச்சயதார்த்தத்திற்கு ஒப்புக் கொண்டாரா என்று விசாரித்த போது தான் அது பொய் என்று தெரிய வந்தது. அனுஷ்காவுக்கும், கோஹ்லிக்கும் நிச்சயதார்த்தம் எல்லாம் இல்லையாம்.

பிசி

பிசி

படங்களில் நடிப்பது தவிர தயாரித்தும் வருகிறார் அனுஷ்கா. நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் ஆனால் அது எப்பொழுது என்று தான் தெரியாது என்கிறார் அனுஷ்கா.

English summary
Rumours were rife that Virat Kohli and Anushka Sharma were going to get engaged on January 1, 2017 in a secret ceremony. The couple went to Dehradun for a vacation with their families and ever since then there have been speculations about their engagement
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil