»   »  பாபா ஹாதிராம்: நாகார்ஜுனாவின் பக்திப்படத்தில் அனுஷ்கா?

பாபா ஹாதிராம்: நாகார்ஜுனாவின் பக்திப்படத்தில் அனுஷ்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் பக்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

யோகா டீச்சராக இருந்த அனுஷ்காவை தன்னுடைய 'சூப்பர்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்த பெருமை நாகார்ஜுனாவையே சேரும்.

இருவரும் இணைந்து 'சூப்பர்', 'டான்', 'தமருகம்', 'ரகட' ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஆரம்ப காலங்களில் மரத்தைச் சுற்றி டூயட் பாடி வந்த அனுஷ்கா 'அருந்ததி' ஹிட்டுக்குப்பின் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.'பாகுபலி', 'ருத்ரமாதேவி' போன்ற படங்களின் மூலம் அனுஷ்காவின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. தற்போது 'சிங்கம் 3', 'பாகுபலி 2' படங்களில் அனுஷ்கா பிஸியாக நடித்து வருகிறார்.

பாபா ஹாதிராம்

பாபா ஹாதிராம்

இந்நிலையில் நாகார்ஜுனா நடிக்கும் பாபா ஹாதிராம் என்னும் பக்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தில் பாலிவுட் நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முயன்றது. ஆனால் இயக்குநர் ராகவேந்திர ராவ் அனுஷ்கா இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்து அவரையே நாயகியாக தேர்வு செய்திருக்கிறார்.

ராகவேந்திர ராவ்

ராகவேந்திர ராவ்

பெருமாளின் பக்தர் பாபா ஹாதிராம் வேடத்தில் நாகார்ஜுனாவும், பெருமாளாக நடிகர் சுமனும் இதில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை தெலுங்கின் மூத்த இயக்குநர் ராகவேந்திர ராவ் இயக்குகிறார்.நாகார்ஜுனா-ராகவேந்திர ராவ் கூட்டணியில் 'அன்னமய்யா', 'ஸ்ரீராமதாசு', 'சீரடி சாய்' ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

ஜூன் மாதம் தொடங்கும் இப்படத்திற்காக தாடி வளர்க்கும் நாகார்ஜுனா, எடை குறைக்கும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறாராம்.விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Nagarjuna Team Up with Anushka for Baba Hathi Ram.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil