»   »  அனுஷ்காவின் ருத்ரமாதேவிக்கு "யூ/ஏ"

அனுஷ்காவின் ருத்ரமாதேவிக்கு "யூ/ஏ"

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அனுஷ்காவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான "ருத்ரமாதேவி" திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கின்றனர்.

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் குணசேகர் உருவாக்கியிருக்கும் வரலாற்றுத் திரைப்படம் ருத்ரமாதேவி.


அக்டோபர் 9 ம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகிறது, இதனையொட்டி சமீபத்தில் படத்தை தணிக்கைக்குழுவிற்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர்.


படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்திற்கு "யூ/ஏ" சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.


ருத்ரமாதேவி

ருத்ரமாதேவி

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, நித்யாமேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் வரலாற்றுத் திரைப்படம் ருத்ரமாதேவி. குணசேகர் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 9 ம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகிறது.


5 மொழிகளில்

5 மொழிகளில்

தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகியிருக்கும் ருத்ரமாதேவி ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. 2D மற்றும் 3D யில் இந்தப் படத்தைக் கண்டு மகிழும்படி படத்தை உருவாக்கியிருக்கின்றனர்.


ஹாலிவுட்டிற்கு இணையாக

ஹாலிவுட்டிற்கு இணையாக

சமீபத்தில் இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டியிருக்கின்றனர். படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் ருத்ரமாதேவிக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கின்றனர். படம் நன்றாக இருக்கிறது மேலும் ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கிறது என்று தணிக்கைக் குழுவினர் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


80 கோடியில்

80 கோடியில்

ருத்ரமாதேவி திரைப்படம் சுமார் 80 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்காவும், சாளுக்கிய வீரபத்ரனாக அல்லு அர்ஜுனும், கோனா கானா ரெட்டியாக ராணா டகுபதியும் நடித்திருக்கின்றனர்.


மெகா ஸ்டார்

மெகா ஸ்டார்

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ருத்ரமாதேவி படத்தில் அல்லு அர்ஜுனிற்கு குரல் கொடுத்திருக்கிறார் இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு எக்கசக்கமாக அதிகரித்திருக்கிறது. படத்திற்கு இசையமைத்திருக்கும் இசைஞானி இளையராஜா படத்தின் பின்னணி இசைக்காக மிகவும் அதிகமாக உழைத்திருக்கிறார். இளையராஜாவின் சிறந்த இடங்களில் ருத்ரமாதேவி படத்திற்கும் ஒரு இடமிருக்கும் என்று கூறுகின்றனர்.


2 மணி நேரம் 38 நிமிடங்கள்

2 மணி நேரம் 38 நிமிடங்கள்

ருத்ரமாதேவி படம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும் படமாக வெளிவரவிருக்கிறது. பாகுபலி திரைப்படமும் இதே கால அளவுடன் தான் வெளிவந்தது. பாகுபலி தமிழில் மட்டும் 1 நிமிடம் அதிகமாக எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.(2 மணி 39 நிமிடங்கள்)


இஞ்சி இடுப்பழகி vs ருத்ரமாதேவி

இஞ்சி இடுப்பழகி vs ருத்ரமாதேவி

அக்டோபர் 9 ம் தேதி ருத்ரமாதேவி வெளியாகும் அதே நாளில் அனுஷ்காவின் மற்றொரு படமான இஞ்சி இடுப்பழகி திரைப்படமும் வெளியாகிறது. ருத்ரமாதேவி அளவிற்கு இல்லையென்றாலும் இஞ்சி இடுப்பழகி படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது உண்மையே.


ஒரே நாளில் 2 படம் அனுஷ்காவிற்கு வெற்றியைத் தேடித் தருமா? பார்க்கலாம்...
English summary
Anushka's Rudhramadevi Movie Censored, Gets U/A Certificate. The Movie Shot on Telugu and Tamil Dubbed in Hindi, Kannada and Malayalam. Rudhramadevi Grand Release around the world on 9 October.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil