»   »  ரசிகர்களை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்த இஞ்சி அடுப்பழகி அனுஷ்கா

ரசிகர்களை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்த இஞ்சி அடுப்பழகி அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டு குண்டாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் ஒன்றும் அனுஷ்கா கண்டமேனிக்கு சாப்பிட்டு குண்டாகிவிடவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தான் அனுஷ்கா இப்படி ஆகியுள்ளார்.

இஞ்சி இடுப்பழகி பட போஸ்டர்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.

அம்மாடி

அம்மாடி

ஒல்லிக்குச்சியாக இருக்க வேண்டும் என்று நடிகைகள் விரும்புகையில் அனுஷ்கா அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்திற்காக உடல் எடையை கணிசமாக அதிகரித்துள்ளார்.

அனுஷ்காவா?

அனுஷ்காவா?

இஞ்சி இடுப்பழகி போஸ்டரில் ஆர்யாவும், சோனால் சவுகானும் அனுஷ்கா முன்பு ரொம்பவே ஒல்லியாகத் தெரிகிறார்கள். போஸ்டரில் அனுஷ்காவின் இடுப்பளவு தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாராட்டு

பாராட்டு

படத்திற்காக குண்டாகியுள்ள அனுஷ்காவை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இத்தனை நாட்களாக நடிகர்கள் உடல் எடையை அதிகரித்து குறைந்து வந்தனர். தற்போது அதை அனுஷ்கா செய்துள்ளார் என்கின்றனர்.

லேடி சீயான்

லேடி சீயான்

உடல் எடையை நினைத்தவுடன் அதிகரித்து குறைப்பதற்கு பெயர் போனவர் சீயான் விக்ரம். இந்நிலையில் அனுஷ்காவும் அதே போன்று செய்துள்ளதால் ரசிகர்கள் அவரை லேடி சீயான் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

ஒல்லி

ஒல்லி

படத்தில் அனுஷ்கா குண்டு மற்றும் ஒல்லிக்குச்சி பெண்ணாக வருகிறார். குண்டு பெண் கதாபாத்திரத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டதும் அவர் தனது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாக ஆகவுள்ளார்.

English summary
Plump Anushka has caught the attention of fans. Fans hail her as Lady Chiyan for her new avatar for the upcoming movie Inji Iduppazhagi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil