ஒருபக்கம் பிரபாஸுடன் திருமண வதந்தி… இன்னொருபுறம் அருந்ததியாக மாறிய அனுஷ்கா: ரசிகர்கள் வெயிட்டிங்
ஐதராபாத்: தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிய அனுஷ்காவின் போட்டோ ட்ரெண்டிங்கில் உள்ளது.
கடந்த சில நாட்களாக அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் விரைவில் திருமணம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், அனுஷ்கா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள மிரட்டலான போட்டோ ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் வைரலாகும் அனுஷ்கா காதல்?
தெலுங்கில் 'சூப்பர்' திரைப்படத்தில் அறிமுகமான அனுஷ்கா, மாதவனின் 'ரெண்டு' படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்தார். சொக்க வைக்கும் அழகும், கொட்டித் தீர்க்கும் கவர்ச்சியுமாக கலங்கடித்த அனுஷ்கா, தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். குறிப்பாக பாகுபலி திரைப்படம், அனுஷ்காவின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இந்நிலையில், சில வருடங்களாகவே பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் இருப்பதாக தகவல் பரவி வந்தது. ஆனால், அது உண்மையில்லை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காதல் வதந்தி வேகமெடுத்துள்ளது.

கிருஷ்ணம் ராஜூவின் கடைசி விருப்பம்?
பிரபாஸ் - அனுஷ்கா திருமணத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பாவும் நடிகருமான கிருஷ்ணம் ராஜூ காலமானார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த போது, பிரபாஸும் அனுஷ்காவும் ஒன்றாக போய் கிருஷ்ணம் ராஜூவை நலம் விசாரித்து வந்தனர். இந்த போட்டோக்கள் வைரலாக, ரசிகர்கள் மீண்டும் பிரபாஸ் - அனுஷ்கா காதல் கதையை பேசத் தொடங்கியுள்ளனர். அதேபோல், மறைந்த கிருஷ்ணம் ராஜூவின் கடைசி விருப்பமும் பிரபாஷ் - அனுஷ்காவின் திருமணம் என்றே சொல்லப்படுகிறது.

அனுஷ்காவின் மிரட்டல் லுக்
கிருஷ்ணம் ராஜூவின் கடைசி விருப்பத்தை பிரபாஸும் அனுஷ்காவும் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திருமண வதந்திகள் குறித்து பிரபாஸ், அனுஷ்கா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. இதைபற்றியெல்லாம் கவலைகொள்ளாத அனுஷ்கா, தனது ட்விட்டர் DP-ஆக மிரட்டலான போட்டோவை ஷேர் செய்து ட்விஸ்ட் வைத்துள்ளார். அனுஷ்கா அருந்ததி லுக்கில் இருக்கும் இந்த போட்டோ சோஷியல் மீடியாக்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.

ரசிகர்கள் வெயிட்டிங்
கடந்த 2009ம் ஆண்டில் அனுஷ்கா நடிப்பில் வெளியான 'அருந்ததி' திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததோடு, வசூலிலும் சம்பவம் செய்தது. இந்தப் படத்தில் வரும் அனுஷ்காவின் லுக்கை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அனுஷ்காவின் கேரியரில் இப்படியெரு மிரட்டல் லுக்கில் அவர் எந்த படத்திலும் நடித்தது இல்லை. இந்நிலையில், அருந்ததி லுக்கில் இருக்கும் போட்டோவை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் DP-ஆக வைத்துள்ளது ஏன் என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த போட்டோ வதந்திகளுக்கான மிரட்டலா அல்லது மணமகள் தோற்றமா என்றும் ரசிகர்கள் குழப்பமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











