»   »  கல்யாணத்தால் ரிலீஸ் தள்ளிப்போகும் அனுஷ்கா படம்!

கல்யாணத்தால் ரிலீஸ் தள்ளிப்போகும் அனுஷ்கா படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த மாதம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்.

அனுஷ்கா சர்மாவின் புதிய படமான 'பரி' படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்தப் படத்தை அனுஷ்காவின் க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

அனுஷ்கா - கோஹ்லியின் திடீர் திருமணத்தால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தாமதமானதால் தற்போது ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா

விராட் கோஹ்லி, தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின், தற்போது நடைபெறும் தென் ஆப்ரிக்கா உடனான தொடருக்கு அனுஷ்கா ஷர்மாவை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

விடுமுறையைக் கொண்டாடும் அனுஷ்கா

விடுமுறையைக் கொண்டாடும் அனுஷ்கா

தற்போது விடுமுறையைக் கொண்டாடி மகிழும் அனுஷ்கா, 'பரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். புரோசிட் ராய் இயக்க, க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் மற்றும் கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இறுதிக்கட்ட பணிகள் தாமதம்

இறுதிக்கட்ட பணிகள் தாமதம்

இப்படத்தின் ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. 'பரி' படம் பிப்ரவரி 9-ம் தேதி ரிலீஸாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அனுஷ்காவின் திடீர் திருமணத்தால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிய தாமதமாகி உள்ளது. இதனால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

ரிலீஸ் தாமதம்

ரிலீஸ் தாமதம்

அதன்படி, 'பரி' படம் மார்ச் 2-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. கோஹ்லி உடனான திருமணத்திற்கு பின், அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பேயாக அனுஷ்கா சர்மா

'பரி' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 18 விநாடிகளே இருக்கும் இந்த டீசரில் அனுஷ்கா ஷர்மா பேய் போன்று காட்டப்பட்டுள்ளார். இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

English summary
Virat Kohli married his girlfriend Bollywood actress Anushka Sharma last month in Italy. Anushka Sharma's new film 'Pari' is at the end of the shooting. Anushka's 'Pari movie has been delayed due to Anushka-Kohli's sudden marriage. Accordingly, 'Pari' will be released on March 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X