»   »  பாக்மதி... மற்றுமொரு சரித்திர படத்தில் அனுஷ்கா?

பாக்மதி... மற்றுமொரு சரித்திர படத்தில் அனுஷ்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அனுஷ்காவிடம் கதை சொல்ல பல முன்னணி இயக்குநர்களுக்குள் போட்டா போட்டியே நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து அனுஷ்காவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Anushka's next Bhagmathi

யூவி கிரியேஷன் தயாரிப்பில் இயக்குநர் ஜி. அசோக் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகவுள்ள 'பாக்மதி' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகுபலி, பாக்மதி என சரித்திர பெயர் கொண்ட படங்களாகப் பார்த்து தேர்வு செய்து நடிக்கிறார் அனுஷ்கா. ஆனால் இந்தப் படம் சரித்திர படமாக இல்லாமல் வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்ன்மென்ட் படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அசோக் தெலுங்கில் இதற்கு 'பில்லா ஜமீன்தார்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

English summary
After Baahubali 2, Anushka has signed a movie in Telugu that titled as Baghmathi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil