»   »  அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது!

அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமாதேவி திரைப்படம் வரும் ஜூன் 26-ம் தேதி பிரமாண்டமாக உலகெங்கும் வெளியாகிறது.

தென்னிந்திய சினிமாவில் இன்றைய தேதிக்கு இரண்டு படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

அவற்றில் ஒன்று எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி. இன்னொன்று குணசேகரன் தயாரித்து இயக்கும் ருத்ரமாதேவி.

ருத்ரமா தேவி அனுஷ்கா

ருத்ரமா தேவி அனுஷ்கா

இதில் ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். ராணா டக்குபதி, அல்லு அர்ஜூன், பிரகாஷ் ராஜ், கேதரைன் த்ரேசா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தாமதம்

தாமதம்

இந்தப் படம் கடந்த மே மாதமே வெளிவரவிருந்தது. ஆனால் பின் தயாரிப்பு வேலைகள் முடியாமலிருந்ததால், இந்தப் படம் வெளியானது தள்ளிப் போனது.

இளையராஜா இசை

இளையராஜா இசை

இதற்கிடையில் இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படத்துக்காக சிம்பொனி இசைக்குழுவை வைத்து லண்டனில் பின்னணி இசை கோர்த்துள்ளார் இளையராஜா. படத்தின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வரும் ஜூன் 26-ம் தேதி உலகெங்கும் ருத்ரமாதேவி வெளியாகிறது.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

13-ம் நூற்றாண்டில் ஆந்திராவின் சில பகுதிகளை ஆண்ட காகதீய வம்ச ராணியான ருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.

English summary
Anushka’s big budget period war drama Rudhramadevi will be releasing on June 26 in Tamil, Telugu and Malayalam.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil